FactCheck: மு.க.ஸ்டாலினுக்கு துபாயில் இருந்து வந்த ரூ.2.50 கோடி மதிப்புள்ள கேக்?- உண்மை இதோ!
‘’மு.க.ஸ்டாலின் ஆர்டர் செய்து, துபாயில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு சென்னை வந்தடைந்த ரூ.2.50 மதிப்புள்ள கேக்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு முதலமைச்சராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7, 2021 அன்று பதவியேற்றுக் கொண்டார். இதையொட்டி, சமூக வலைதளங்களில் அவரது பெயரில் நிறைய வாழ்த்துச் செய்திகளும், விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
இதில் ஒரு விமர்சனம்தான் மேலே நாம் கண்ட தகவல். ஆனால், அது ஒரு போலியான தகவலை அடிப்படையாகக் கொண்டதாகும்.
ஆம். குறிப்பிட்ட தலைமைச் செயலக வடிவிலான கேக்கை வடிவமைத்தது, சென்னையை சேர்ந்த Cake Square என்ற நிறுவனமாகும்.
குறிப்பிட்ட கேக்கை டெலிவரி செய்யும் முன்பாக, சம்பந்தப்பட்ட பேக்கரி சார்பாக, ஃபேஸ்புக்கில் தகவல் பகிரப்பட்டிருக்கிறது.
இதற்கடுத்தப்படியாக, சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக, இது துபாயை சேர்ந்த கேக் தயாரிப்பாளரால் வடிவமைக்கப்பட்டது என்று கூறி தகவல் பரவியதை அடுத்து, இதுபற்றி சம்பந்தப்பட்ட பேக்கரி மறுப்பு தெரிவித்து, ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
இது மட்டுமல்ல, இந்த கேக்கை ஆர்டர் செய்து, வாங்கி வந்தவர் திமுக.,வின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட நிர்வாகி டாக்டர்.மாலதி ஆவார். இந்த கேக்கின் விலை ரூ.30,000 மட்டுமே; ரூ.2.50 கோடி கிடையாது. மாலதியின் ட்விட்டர் பதிவை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
எனவே, சென்னையை சேர்ந்த பேக்கரி தயாரித்த கேக்கின் புகைப்படத்தை எடுத்து, துபாயை சேர்ந்த கேக் தயாரிப்பாளர் வடிவமைத்த ரூ.2.50 கோடி விலையுள்ள கேக் என்று கூறி, தவறான தகவல் பகிர்ந்து வருகின்றனர் என்பது சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:மு.க.ஸ்டாலினுக்கு துபாயில் இருந்து வந்த ரூ.2.50 கோடி மதிப்புள்ள கேக்?- உண்மை இதோ!
Fact Check By: Pankaj IyerResult: False