
‘’டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டி வந்த நபர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ #JUSTIN டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டி வந்தவரின் அடையாளம் தெரிந்தது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதே செய்தி tamil.news18.com இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது, என்று தெரியவந்தது.

மேற்கண்ட செய்தியில்,
‘’டெல்லி கார் குண்டு வெடித்தபோது காரை ஓட்டிவந்தவரின் அடையாளம் தெரிந்தது. குண்டு வெடிப்பிற்கு அரைமணி நேரம் முன்னதாக சுங்கச்சாவடியை கார் கடந்து சென்றது தெரியவந்தது. காரை ஓட்டி வந்தவரின் புகைப்படத்தை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. உமர் என்று அழைக்கப்படக்கூடிய அந்த நபர் காரை பதர்ப்பூர் எல்லை வழியாக டெல்லிக்கு கொண்டு வந்ததாகவும் நேற்று மாலை 3 மணிநேரம் செங்கோட்டை அருகே உள்ள பூங்காவில் நிறுத்திவைக்கப்பட்டு அதன்பின் மாலை 6.30 மணி அளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சிக்னல் அருகே காரை கொண்டுவந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.’’
இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
அதேசமயம், News 18 Tamil Nadu ஃபேஸ்புக் பக்கத்தில், டெல்லி கார் குண்டு வெடிப்பு குற்றவாளி என்று குறிப்பிட்டு வேறு ஒருவரின் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.

இதன்படி, News 18 Tamil Nadu ஊடகம், பரபரப்பு நோக்கில் இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான தகவலுடன் செய்தி வெளியிட்டுள்ளதாக, நமக்கு தெரியவருகிறது.
உண்மை என்னவெனில், டெல்லி குண்டுவெடிப்புக்கு காரணமான நபர் என்று போலீசார் கூறுவது, Muhammad Umar என்ற டாக்டரின் பெயர்…
இதுதொடர்பாக, சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்கள் ஏற்கனவே போலீஸ் தரப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், உமர் ஓட்டிவந்த Hyundai i20 மாடல் காரின் பதிவு எண் HR26CE7674.
அடுத்தப்படியாக, News 18 Tamil ஊடகம் வெளியிட்டுள்ள நியூஸ் கார்டில் உள்ள நபர் யாரென்றால், டெல்லி குண்டுவெடிப்பில் பலியான நபர். அவரது பெயர் Pankaj Sahni. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர். பங்கஜ் ஓட்டிவந்த காரின் பதிவு எண் DL1RT6662.
இதுபற்றி நமது Fact Crescendo Malayalam பிரிவு சார்பாக, ஏற்கனவே விரிவான ஃபேக்ட்செக் வெளியிடப்பட்டுள்ளது. அதனை படிக்க இங்கே Click செய்யவும்…
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட News 18 Tamil நியூஸ் கார்டில் தவறான நபரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


