‘’மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது,’’ என்று பாஜக அண்ணாமலை விமர்சனம் செய்ததாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2
Facebook Claim Link 3Archived Link 3

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி ஒரு சர்ச்சைக்குரியதாகும். ஆம், இந்த செய்தியை முதலில் சன் நியூஸ் ஊடகம் வெளியிட்ட உடனே, பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, தனது கருத்தை சன் நியூஸ் ஊடகம் தவறாக புரிந்துகொண்டு, வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளதாகக் கூறி கண்டனம் தெரிவித்தார்.

இதுபற்றி அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவின் லிங்கையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Archived Link

அவர் ட்வீட் வெளியிட்டதும், சன் நியூஸ் ஊடகம் உடனே அந்த பதிவை ட்விட்டரில் நீக்கிவிட்டது. இதில் இருந்தே, இது தவறாக வெளியிடப்பட்ட செய்தி என்று சந்தேகமின்றி தெளிவாகிறது. இந்த உண்மை தெரியாமலேயே பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

SunNewsTamil Deleted Twitter Link

உண்மையில் நடந்தது என்னவென்றால், ‘’தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிகள் (திமுக, அதிமுக) மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை, தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு ரூ.2000 என வழங்கி, ஓட்டு வாங்குகின்றன. இதனை மக்கள் நம்பி ஏமாறக் கூடாது,’’ என்று சமீபத்தில் கோவையில் நிகழ்ந்த பாஜக கூட்டம் ஒன்றில், அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார்.

இதனை மற்ற ஊடகங்கள் பலவும் சரியான முறையில் வெளியிட்ட நிலையில், சன் நியூஸ் ஊடகம் தவறாகப் புரிந்துகொண்டு, செய்தி வெளியிட்டு, வாசகர்களை குழப்பியுள்ளதாக, தெளிவாகிறது.

Archived Link

Tamil Hindu LinkBBC Tamil LinkDinamani Link

இது தவிர, அண்ணாமலை கோவையில் பேசிய வீடியோ ஆதாரமும் கீழே தரப்பட்டுள்ளது.

Archived Link

இதனை தவறாக புரிந்துகொண்டு, சன் நியூஸ் ஊடகம் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், தவறு தெரியவந்ததும் உடனடியாக, அதனை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்தும் நீக்கிவிட்டது.

Archived Link

எனவே, தேர்தல் நேரத்தில் ஓட்டுக்குப் பணம் தருவதை அண்ணாமலை விமர்சித்து பேசியிருக்கிறார். ஆனால், அவர் தமிழக அரசு (எடப்பாடி பழனிசாமி) தற்போது அறிவித்துள்ள ரூ.2500 பொங்கல் பரிசை விமர்சனம் செய்துவிட்டதாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தமிழக அரசின் பொங்கல் பணப் பரிசு அறிவிப்பை அண்ணாமலை விமர்சனம் செய்தாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False