குடியரசு தினத்தில் இந்திய போர் விமானங்கள் நடுவானில் உருவாக்கிய திரிசூலம் புகைப்படம் இதுவா?

இந்தியா சமூக ஊடகம்

‘’குடியரசு தினத்தில் இந்திய போர் விமானங்கள் சாகசம் செய்த திரிசூலம் புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

மேற்கண்ட பதிவை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இந்த புகைப்படம் உண்மையா என்ற சந்தேகத்தில் கூகுளில் பதிவேற்றி ஆதாரம் தேடினோம். அப்போது, இது மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்று என்பதற்கான விவரங்கள் கிடைத்தன.

ஆம், குடியரசு தினத்தின்போது, SU 30 MKI போர் விமானங்கள் நடுவானில் உருவாக்கிய திரிசூலம் வடிவம் பற்றிய வீடியோவை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. அதனை பார்த்தபோது, நாம் பார்க்கும் புகைப்படத்தில் இருப்பதை விட வித்தியாசமான வகையில் திரிசூலம் வடிவத்தை, இந்திய போர் விமானங்கள் உருவாக்குகின்றன. அந்த வீடியோ கீழே தரப்பட்டுள்ளது. 

எனினும், இது 2016ம் ஆண்டில் எடுக்கப்பட்டதாகும். 2020ம் ஆண்டில் நடைபெற்ற குடியரசு தினத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ கிடைக்குமா என ஆதாரம் தேடினோம். அப்போது, டிடி தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ கிடைத்தது. 

இவ்விரு வீடியோக்களையும் பார்த்தாலே தெளிவாக தெரிகிறது. எந்த ஆண்டில் குடியரசு தினக் கொண்டாட்டம் நடைபெற்றாலும் SU 30 MKI ரக போர் விமானங்கள் ஒரே மாதிரியான திரிசூலம் வடிவத்தையே ஏற்படுத்துகின்றன. நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ளதைப் போன்ற வடிவத்தை ஏற்படுத்தவில்லை.

இதுதொடர்பான செய்தி ஆதாரங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன. 

Indiatvnews.com Link Newsmobile.in Link 

இதுமட்டுமின்றி, டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற 2020 குடியரசு தினக் கொண்டாட்டம் தொடர்பான முழு வீடியோவும் கீழே தரப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து, குடியரசு தினக் கொண்டாட்டம் பற்றியும், இந்திய ராணுவ தளவாடங்கள், போர் விமானங்கள் பற்றியும் வேறு ஏதேனும் வதந்தி பகிரப்பட்டால் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் புகைப்படம் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:குடியரசு தினத்தில் இந்திய போர் விமானங்கள் நடுவானில் உருவாக்கிய திரிசூலம் புகைப்படம் இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •