FactCheck: தமிழ் மொழிக்கு மட்டுமே தேசிய மொழி தகுதி உள்ளது என்று மத்திய அரசு குறிப்பிட்டதா?

அரசியல் | Politics சமூகம் தமிழ்நாடு | Tamilnadu

‘’இந்தியாவுக்கு என தேசிய மொழி இருந்தால், அது தமிழாக மட்டுமே இருக்க வேண்டும்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இந்த டெம்ப்ளேட்டை வாசகர் ஒருவர் +919049053770 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் நமக்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டார். இதன்பேரில், நாம் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Screenshot: FB posts with similar caption
Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியை நியூஸ் 7 தமிழ் உள்பட பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டிருக்கின்றன. ஆனால், எங்கேயும் தமிழ்தான் தேசிய மொழியாக இருக்க தகுதி பெற்ற மொழி எனக் குறிப்பிடப்படவில்லை.

இதேபோல, தந்தி டிவி வெளியிட்ட செய்தியை கீழே இணைத்துள்ளோம்.

DMK FB Post Link I Dailythanthi Link I OneIndia Tamil Link

இதன்படி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜா என்பவர், யானைகள் மீது ரயில்கள் மோதல் தொடர்பாக, ரயில்வே நிர்வாகத்திடம், ஆங்கிலத்தில் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு, அவருக்கு இந்தியில் பதில் அளித்து இருந்தனர். இதேபோல, மேலும் சிலருக்கும் இந்தியில் பதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பாண்டியராஜா, இந்திய மொழிகள் சம்பந்தமாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதனை உள்துறை அமைச்சகம், ஒன்றிய அலுவல் மொழிகள் துறைக்கு அனுப்பி வைத்தது. அந்த துறையினர் அளித்த பதிலில், ‘’இந்தியாவிற்கு என தேசிய மொழி எதுவும் கிடையாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால், எந்த மொழியில் பதிலளிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக ஒன்றியல் அலுவல் மொழிகள் துறை சார்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப் படவில்லை. அதேபோல, தகவல் தரும் அதிகாரி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு, இந்தியில் பதிலளித்தால் அவருக்கு எந்த தண்டனையும் கிடையாது. அலுவல் மொழி விதிகள் 1976 தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது,’’ என்று கூறப்பட்டிருந்தது.

Kalaignar Seithigal Link

ஆனால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில், ‘’இந்தியாவிற்கு என்று தேசிய மொழி எதுவும் கிடையாது. அப்படி இருக்க வேண்டுமெனில், அது தமிழ் மொழியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். புதிய தலைமுறை டெம்ப்ளேட் ஒன்றை எடுத்து, அதில் இவ்வாறு எடிட் செய்துள்ளனர்.

இதன்படி, ‘’தேசிய மொழி என ஒன்று இருந்தால், அது உலகின் பழமையான மொழி தமிழாக தான் இருக்க வேண்டும்,’’ எனக் குறிப்பிட்டுள்ள பகுதி, எடிட் செய்து சேர்க்கப்பட்டதாகும். இதனை நாம் புதிய தலைமுறை ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:தமிழ் மொழிக்கு மட்டுமே தேசிய மொழி தகுதி உள்ளது என்று மத்திய அரசு குறிப்பிட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False