
‘’தாளகிரி சிவன் கோயிலில் இரண்டாம் நரசிம்மவர்மன் கோயிலில் செதுக்கிய கணினி மற்றும் கீ போர்டு சிற்பம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் நமக்கு +91 9049044263 மற்றும் +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண்களில் அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக், ட்விட்டரில் பகிர்வதையும் கண்டோம்.
Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தாளகிரீஸ்வரர் கோயிலை கட்டியவர் 2ம் நரசிம்மவர்மன். அவர், மேலும் பல கோயில்களை கட்டியுள்ளார். அதனை நாம் மறுப்பதற்கில்லை.
ஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவின் கமெண்ட் பிரிவிலேயே பலரும் இதனை ஃபேக் என்று குறிப்பிட்டு கமெண்ட் பகிர்ந்திருந்ததைக் கண்டோம்.

அடுத்தப்படியாக, குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இது அமேசான் இணையதளத்தில் விற்பனை செய்யப்படும் என்ற புத்தகத்தின் அட்டைப்படம் என்று விவரம் கிடைத்தது.

எனவே, ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் புத்தகம் ஒன்றின் அட்டைப்படத்தினை எடுத்து, உண்மையாகவே பல்லவர்கள் காலத்தில் செதுக்கப்பட்ட கோயில் சிற்பம் என்று கூறி வதந்தி பரப்புகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:இரண்டாம் நரசிம்மவர்மன் தாளகிரி சிவன் கோயிலில் செதுக்கிய கணினி மற்றும் கீபோர்டு சிற்பம் இதுவா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False

thank you sir for correcting;
நானும் எத்தனையோ பாஜக மத்திய அரசு மீதான தவறான தகவல்கள் பகிரப்படுவதை false information report அடித்திருக்கிறேன் ஆனால் ஒரு நடவடிக்கையும் இல்லை. ஆனால் பாஜகவினரின் post மட்டும் இது போல் தடுக்கபடுகிறது.
Then how was the picture derived. have all dissenters visit the said place for fact checking?