சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது எடுக்கப்பட்ட அரிய வீடியோ இதுவா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social விளையாட்டு

‘‘சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது எடுக்கப்பட்ட அரிய வீடியோ,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Tweet Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

சுவாமி விவேகானந்தர் கடந்த கி. பி. 1893ம் ஆண்டு சிகாகோவில் நடந்த மதங்கள் தொடர்பான மாநாடு ஒன்றில் பங்கேற்று பேசியது இன்றளவும் நினைவு கூறப்படுகிறது. 

இந்த சூழலில், விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது எடுக்கப்பட்ட அரிய வீடியோ என்று பகிரப்படும் காட்சி உண்மையா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். 

ஆம். இந்த வீடியோவில் உள்ள நபர் Paramahansa Yogananda ஆவார். இவர், கடந்த 1923ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள பெர்ஷிங் சதுக்கத்தில் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோதான் இது. 

கூகுள் ரிவர்ஸ் இமேஜ் உதவியுடன் நாங்கள் இதுபற்றி தேடியபோது, இவ்வாறு விவரம் கிடைத்தது. இதுபற்றிய வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட காட்சி இருப்பதைக் காண முடிகிறது.  

இதுதொடர்பான புகைப்பட ஆதாரம் ஒன்றையும் இங்கே இணைத்துள்ளோம். 

digital.tcl.sc.edu link 

எனவே, வேறொரு நபரின் வீடியோவை எடுத்து, விவேகானந்தர் என்று தவறான செய்தியை பரப்புகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது எடுக்கப்பட்ட அரிய வீடியோ இதுவா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False