‘’ கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் திமுக அரசு ரூ.10 லட்சம் தருகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் ஆய்வு மேற்கொண்டோம்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட தகவல் பற்றி நாம் சென்னை அம்பத்தூர் போலீசாரை (உதவி ஆணையர் அலுவலகம்) தொடர்பு கொண்டோம். அவர்கள் பேசுகையில், ‘’அம்பத்தூர், அயப்பாக்கம் பிரதான சாலை, தென்னாட்டு காந்தி அண்ணா நகரைச் சேர்ந்தவர் இம்மானுவேல். இவருக்குச் சொந்தமான இடத்தில் அகமது இப்ராஹிம், என்பவர் 'ரியல் பைல்ஸ் ட்ரீட்மென்ட்' என்ற பெயரில் நாட்டு வைத்தியம் பார்க்கும் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இப்ராஹிம், கிளினிக் முன்பாக எல்.இ.டி., விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார். அதில், ரியல் பைல்ஸ் ட்ரீட்மென்ட் அண்டு ட்ரடிஷனல் ட்ரீட்மென்ட் என்ற வாசகத்தை ஒளிர செய்திருக்கிறார். இதனை யாரோ ஒருவர் வேண்டுமென்றே ஹேக் செய்து, அனைவரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுங்கள்; தி.மு.க., அரசால் சலுகைகள் கிடைக்கும் மற்றும் 10 லட்சம் வரை டிரஸ்ட் மூலம் கிடைக்கும் என்று எழுதியுள்ளார். இதுபற்றி இப்ராஹிம் கிளினிக்கில் பணிபுரியும் கரீம் என்பவர் அளித்த புகாரின் பேரில், மர்ம நபரை தேடி வருகிறோம்,’’ என்றனர்.

எனவே, இது ஹேக்கிங் முறையில் நிகழ்ந்த தவறு, இப்படி யாரும் விளம்பரம் செய்யவில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் திமுக அரசு ரூ.10 லட்சம் தருகிறதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: Misleading