ஆண் பெண் சேராமலேயே செயற்கை கருப்பை மூலம் குழந்தை பெறலாமா?
‘’செயற்கை கருப்பை வசதி மூலமாக இனி ஆண், பெண் சேராமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம்,’’ என்று ஒரு வீடியோ மற்றும் அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவைபற்றி நாம் ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
”செயற்கை கருப்பை வசதி வந்துவிட்டது, இனி ஆண் பெண் சேராமலேயே குழந்தை பெறலாம். ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை பெற்றுத் தரும் செயற்கை கருப்பை,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பகிரப்படுகிறது.
இதனை உண்மை என நம்பி ஏராளமானோர் ஷேர் செய்வதையும் கண்டோம்.
உண்மை அறிவோம்:
இதுதொடர்பாக, நாம் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் உதவியுடன் தகவல் தேடிய போது, Hashem Al-Ghaili என்ற நபரின் யூடியுப் பக்கத்தில் இதுபற்றிய வீடியோ பகிரப்பட்டிருப்பதைக் கண்டோம்.
மேலும், அவரின் யூடியுப் பக்கத்தில் இது போன்ற பல விஞ்ஞான ரீதியான வீடியோக்கள் இருப்பதை நாம் அவதானித்தோம்.
தொடர்ந்து இது குறித்து அவரின் பேஸ்புக் பக்கத்தினை நாம் ஆய்வு செய்த போது, அவரே, ‘இது கணினி உதவியுடன் உருவாக்கப்பட்ட வீடியோ, உண்மயானதல்ல,’ என்று பதிவிட்டதைக் கண்டோம்.
மேலும், அந்த பதிவில் ‘’இந்த EctoLife வசதியை உருவாக்குவதற்கான உடனடித் திட்டங்கள் எதுவும் என்னிடம் இல்லை, இதுபோன்று எதிர்காலத்தில் உருவாகலாம்,’’ என்று எதிர்பார்ப்பதாக, Hashem Al-Ghaili குறிப்பிட்டிருந்ததையும் கண்டோம்.
இதேபோன்று 2020 ஆம் ஆண்டு ஏற்கனவே ஒருமுறை அவர், செயற்கை கருப்பை மூலம் குழந்தை என்ற அர்த்தத்தில் தயாரித்து பகிர்ந்திருந்த ஒரு வீடியோவும் கீழே தரப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் வெளியிட்ட ஊடக செய்திக்குறிப்பு ஒன்றையும் கீழே இணைத்துள்ளோம். இதன்பேரிலேயே பலரும் செய்தி வெளியிட்டு வருகின்றனர். ஆனால், இது ஒரு கற்பனை மட்டுமே. உண்மையான நிறுவனம் அல்ல.
இதுபற்றி Reuters செய்தி நிறுவனம் Hashem Al-Ghaili தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, இது உண்மையானதல்ல, என உறுதி செய்துள்ளார். மேலும், "இது எனது கற்பனை நிறுவனம், உண்மையாகச் செயல்படும் நிறுவனம் அல்ல. இது முழுக்க முழுக்க ஒரு கற்பனையே," என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், செயற்கை கருப்பை வசதி என பகிரப்படும் வீடியோ கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒன்று என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:ஆண் பெண் சேராமலேயே செயற்கை கருப்பை மூலம் குழந்தை பெறலாமா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False