‘‘திராவிட மாடல் Worst என்று எழுதிக் காட்டிய சிஎஸ்கே ரசிகர்’’, என சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Tweet Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதையொட்டி பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் (ஈடில்லா ஆட்சி 2 ஆண்டே சாட்சி) சமூக வலைதளங்களிலும், தமிழ்நாடு அரசு தரப்பிலும் முன்னெடுக்கப்பட்டன.

இதனை கிண்டல் செய்யும் நோக்கில் சில மேற்கண்ட புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், உண்மையில் இது ஒரு எடிட் செய்த புகைப்படம் ஆகும்.

உண்மையான புகைப்படம் வேறு சில செய்திகளில் காணக் கிடைக்கிறது. அதனைக் கீழே இணைத்துள்ளோம்.

Oneindia Tamil link

நாம் ஆய்வு செய்யும் படத்தோடு உண்மையான படத்தையும் ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் உண்மையானதல்ல என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.


முடிவு
:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title: ‘Worst திராவிட மாடல்’ என்று சிஎஸ்கே ரசிகர் காட்டியதாகப் பரவும் வதந்தி…

Fact Check By: Fact Crescendo Team

Result: ALTERED