“வேட்டையன் படம் சரியில்லை என்ற யூடியூப் விமர்சகர்” என்று பரவும் பதிவு உண்மையா?

சினிமா | Cinema

ரஜினிகாந்தின் வேட்டையன் படம் சரியில்லை என்று யூடியூப் விமர்சகர் ஒருவர் கடுமையாக விமர்சித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook

யூடியூப் திரை விமர்சகர் ஒருவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேட்டையன் திரைப்படம் சரியாக இல்லை என்று கூறியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “First half , second half rendumey mmbiruchu pola 😭😭🤣🤣 

Panda kitaye serupadi vaangirukan .. apo bluesattai kita” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10, 2024 அன்று வெளியானது. இந்த திரைப்படம் நன்றாக உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் யூடியூப் திரை விமர்சகர் ஒருவர் இந்த திரைப்படம் நன்றாக இல்லை என்று கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த விமர்சகரை அனைவரும் கடுமையாக விமர்சித்து ரஜினி ரசிகர்கள் சிலர் பதிவிடவே, இந்த வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, tamilcinemareview என்ற யூடியூப் சேனலில் இந்த நபரின் வீடியோக்கள் இருப்பதைக் கண்டோம். வீடியோவின் முகப்பு பக்கத்திலேயே நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருப்பது போன்று டிஷர்ட் அணிந்து அண்ணாத்த படத்தை விமர்சனம் செய்திருந்ததைக் காண முடிந்தது. 

அதில் அந்த நபரின் பெயர் பிரஷாந்த் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இடம் பெற்ற காட்சி அப்படியே வந்தது. இதன் மூலம் அண்ணாத்த படத்தை விமர்சனம் செய்த வீடியோவை எடிட் செய்து வேட்டையன் படத்தின் ஸ்டில்லை வைத்து தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவானது.

இந்த பிரஷாந்த் என்ற நபரின் சமூக ஊடக பக்கங்களைத் தேடிப் பார்த்தோம். அவரது எக்ஸ் தள பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தொடர்பாக யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவுக்கு கமெண்ட் செய்திருப்பது தெரிந்தது. அதில், “டேய் டெய் இது அண்ணாத்த ரிவ்யூ டா. ஏன்டா இப்படி பண்றீங்க (Dey dey . Ithu annathe review da . Endaa ipdi panreenga )” என்று குறிப்பிட்டிருந்தார். இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை உறுதி செய்தன.

Archive

முடிவு:

ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் சரியில்லை என்று யூடியூப் திரைவிமர்சகர் பிரஷாந்த் கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“வேட்டையன் படம் சரியில்லை என்ற யூடியூப் விமர்சகர்” என்று பரவும் பதிவு உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: False