எஸ்ஜே சூர்யா காதல் வலையில் பிரியா பவானி சங்கர்; குழப்பம் தரும் ஏசியா நெட் தமிழ் செய்தி

சமூக வலைதளம் சினிமா

‘’எஸ்ஜே சூர்யா காதல் வலையில் விழுந்த பிரியா பவானி சங்கர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Link Archived Link 1Asianet News TamilArchived Link 2

ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை இந்த ஃபேஸ்புக் பதிவில் இணைத்து பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியின் தலைப்பை படிக்கும்போது, நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் எஸ்ஜே சூர்யா இடையே காதல் மலர்ந்தது போல நினைக்க தோன்றுகிறது. ஆனால், செய்தியின் உள்ளே, ‘’மான்ஸ்டர் படத்தில் நடித்ததை தொடர்ந்து எஸ்ஜே சூர்யாவுடன் நட்பு பாராட்டி வருவதால், அவர் சொல்லை தட்ட முடியாமல் புதிய படம் ஒன்றில் மீண்டும் அவருடன் ஜோடியாக நடிக்க உள்ளதாக பிரியா பவானி சங்கர் தெரிவித்தார்,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்திக்கு, எஸ்ஜே சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேருகிறார் பிரியா பவானி சங்கர் அல்லது எஸ்ஜே சூர்யாவின் காதலியாக மீண்டும் நடிக்கிறார் பிரியா பவானி சங்கர் அல்லது எஸ்ஜே சூர்யாவுடன் மீண்டும் காதல் செய்யப் போகும் பிரியா பவானி சங்கர் என்பன போன்ற தலைப்புகளை வைக்காமல், எஸ்ஜே சூர்யாவின் காதல் வலையில் விழுந்த பிரியா பவானி சங்கர் என மொட்டையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

எஸ்ஜே சூர்யா 51 வயதான நிலையில் இன்னமும் சிங்கிள் வாழ்க்கை வாழ்கிறார் என்பதால் இந்த செய்தியின் தலைப்பை பார்த்ததும் பலருக்கும் குழப்பம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியின் தலைப்பு தவறு என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:எஸ்ஜே சூர்யா காதல் வலையில் பிரியா பவானி சங்கர்; குழப்பம் தரும் ஏசியா நெட் தமிழ் செய்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False Headline

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •