விஜய் படத்தில் படுக்க அழைத்தார்கள்: சர்ச்சையை கிளப்பும் இணையதள செய்தி

சமூக ஊடகம் சினிமா

விஜய் படத்தில் நடிக்க என்னை படுக்க அழைத்தார்கள் என்று பிரபல நடிகை கூறியதாக, இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தியால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\vijay 2.png

Archived Link

இதே செய்தியை தனது இணையதள பக்கத்திலும் Cinefield.com வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியின் தலைப்பில் நடிகர் விஜய் படத்தில் நடிக்க என்னை படுக்க அழைத்தார்கள் எனக் கூறிவிட்டு, செய்தியின் உள்ளே நடிகர் விஜய் தேவரகொண்டா படம் எனக் கூறியுள்ளனர்.

C:\Users\parthiban\Desktop\vijay 3.png

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் விஜய் என்றால், அது இளையதளபதியாக இருந்து தற்போது தளபதியாக மாறியுள்ள விஜய் மட்டுமே. அவரது பிரபலத்தை பயன்படுத்தி, விஜய் தேவரகொண்டா படம் பற்றிய செய்திக்கு, விஜய் என மொட்டையாக தலைப்பிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தி, செய்தியின் வைரலாட்டியை அதிகரிக்க இவ்வாறு பகிர்ந்துள்ளனர் என உறுதியாகிறது.

C:\Users\parthiban\Desktop\vijay 4.png

ஒரு பிரபலமான நடிகர் ஏற்கனவே விஜய் என்ற பெயரில் சினிமாவில் வலம் வரும் நிலையில், விஜய் தேவரகொண்டா என முழுவதுமாக பெயரை குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும். அப்படி செய்யாமல் மொட்டையாக தலைப்பிட்டுள்ளதே, இந்த செய்தியில் உள்ள தவறாகும்.

C:\Users\parthiban\Desktop\vijay 5.png

எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறு என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறானது என, நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:விஜய் படத்தில் படுக்க அழைத்தார்கள்: சர்ச்சையை கிளப்பும் இணையதள செய்தி

Fact Check By: Parthiban S 

Result: False Headline

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •