‘’அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

நாடு முழுவதிலும் இருந்து ராம பக்தர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்வை நேரில் காண அயோத்தியில் குவிந்துள்ளனர்.

அதேசமயம், ‘’கால் வலி இருப்பதால், ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வுக்கு நேரில் செல்ல இயலாத சூழலில் உள்ளேன்,’’ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இந்நிலையில், அவர் கால் வலி என்று கூறிவிட்டு தற்போது முஸ்லீம் மக்களை ஏமாற்றும் வகையில் அயோத்தி சென்றுள்ளதாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து, சமூக வலைதளங்களில் சிலர் தகவல் பரப்புகின்றனர்.

ஆனால், இதுபற்றி அதிமுக தரப்பில் கேட்டபோது, ‘’எடப்பாடி பழனிசாமி அயோத்தி சென்றாகக் கூறப்படும் புகைப்படம் தவறானது. அவர் இங்கேதான் உள்ளார். எங்கள் கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்,’’ என்றனர்.

இதுதொடர்பான செய்தி ஆதாரங்கள் இதோ…

Dailythanthi Link 1 l Dailythanthi Link 2

தொடர்ந்து தேடியபோது, நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி சென்ற படத்தை எடுத்து, எடிட் செய்து, எடப்பாடி பழனிசாமி பெயரில் வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரியவந்தது.

உண்மையான படத்தையும், போலியான படத்தையும் ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றாரா?

Written By: Fact Crescendo Team

Result: Altered