நடிகர் குமரிமுத்து மரணம்: பழைய செய்தியை புதிதுபோல பகிர்ந்து விஷமம்!

சமூக ஊடகம் சினிமா

‘’நடிகர் குமரிமுத்து இறந்துவிட்டார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பரவி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Sai Kowsikan என்பவர் ஆகஸ்ட் 9, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், குமரிமுத்துவிற்கு கண்ணீர் அஞ்சலி தெரிவித்து வெளியிடப்பட்ட போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவர் விவரம் தெரியாமல் இப்படி பதிவு வெளியிட்டாரா அல்லது விஷமத்தனமாக இப்படி செய்தாரா என்று தெரியவில்லை. குமரிமுத்து இறந்து, 3 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், தற்போது அவர் இறந்துவிட்டதைப் போல தகவல் பகிர்ந்து, ஃபேஸ்புக் பயனாளர்களை மேற்கண்ட நபர் குழப்பியுள்ளார்.

ஆம். தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர நடிகராக வலம் வந்த குமரிமுத்து, கடந்த 2016, பிப்ரவரி 28 அன்று, உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதுபற்றி IndiaGlitz வெளியிட்ட யூ டியுப் செய்தி வீடியோ கீழே நமது ஆதாரத்திற்காக, இணைக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏற்கனவே உயிரிழந்த ஒருவரை தற்போது உயிரிழந்துவிட்டதைப் போல தவறான தகவல் பகிர்ந்துள்ளனர். இது தவறான செயல் என இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பழைய செய்தியை புதியதுபோல பகிர்ந்துள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய பழைய அதேசமயம் தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நடிகர் குமரிமுத்து மரணம்: பழைய செய்தியை புதிதுபோல பகிர்ந்து விஷமம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •