40 வருட வசூலை ஒரே நாளில் அள்ளிய அத்தி வரதர்: ஃபேஸ்புக்கில் பரவும் வீடியோ

சமூக ஊடகம் | Social சமூகம்

40 வருட கலெக்‌ஷனை ஒரு நாளில் அள்ளிய அத்தி வரதர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Guruvayur 2.png

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

1.59 நிமிட வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், கோவில் ஒன்றில் உண்டியல் திறக்கப்பட்டு அதில் உள்ள நகைகள், பணம் உள்ளிட்டவை பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டு செல்லப்படுகின்றன.

நிலைத்தகவலில், “40 வருட கலெக்‌ஷனை ஒரே நாளில் அள்ளிய அத்தி வரதர்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, பாசம் என்ற ஃபேஸ்புக் குழு பகிர்ந்துள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள குளத்தில் அத்தி வரதர் வைக்கப்பட்டிருப்பார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, 48 நாட்களுக்கு பக்தர்களுக்குக் காட்சி தருகிறார் அத்தி வரதர். அத்தி வரதரைக் காண கோடிக் கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

காஞ்சிபுரம் வந்த கோடிக்கணக்கான பக்தர்கள் அளித்த காணிக்கைகளால் அத்தி வரதர் கோவில் உண்டியல் நிரம்பிவழிவது போன்று வீடியோவை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவைப் பார்க்கும்போது கேரளாவில் உள்ள கோவில் போலத் தெரிந்தது. நபர்களும் கேரளாவைச் சார்ந்தவர்கள் போலவே உள்ளனர். வீடியோவில் அத்திவரதர் உள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் என்று எதுவும் சொல்லவில்லை.

Guruvayur 3.png

தொடக்கத்தில் சிலர் மலையாளத்தில் பேசுவது போல கேட்கிறது. ஆனால் தெளிவாக இல்லை. பின்னர், பணத்தை நிரப்பும் சப்தம் மட்டுமே கேட்கிறது. ஆனால், நிலைத் தகவலில் அத்தி வரதர் வசூல் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Guruvayur 4.png

இதனால், இந்த படத்தின் சில காட்சிகளை மட்டும் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ பற்றிய தகவல் நமக்கு கிடைத்தன. சிலர் இதை திருப்பதி கோவில் என்று குறிப்பிட்டு இருந்தனர், சிலர் இதை குருவாயூர் கோவில் என்று குறிப்பிட்டிருந்தனர். 

Archived Link

கேரளா டைப் கோவில் உள்ளதாலும் குருவாயூர் என்று குறிப்பிட்டிருப்பதாலும் அந்த வீடியோவை ஓப்பன் செய்து பார்த்தோம். 2017ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வீடியோவை Sailesh Thakker பகிர்ந்திருந்தார்.  “கேரளா குருவாயூர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டபோது” என்று அந்த வீடியோ பற்றி அவர் குறிப்பிட்டு இருந்தார்.

நம்முடைய ஆய்வில்,

வீடியோவை பார்க்கும்போது அது கேரள கோவில் போல உள்ளது.

கேரளாவில் உள்ள குருவாயூர் கோவில் உண்டியல் திறப்பு என்று 2017ம் ஆண்டு இந்த வீடியோ யூடியூபில் பதிவிடப்பட்டது தெரியவந்துள்ளது.

அத்தி வரதர் 2019 ஜூன் 1ம் தேதிதான் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட வீடியோ அத்தி வரதர் உள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் இல்லை என்பதும், கேரள கோவில் ஒன்றின் பழைய வீடியோவை விஷமத்தனமாக பகிர்ந்துள்ளனர் என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:40 வருட வசூலை ஒரே நாளில் அள்ளிய அத்தி வரதர்: ஃபேஸ்புக்கில் பரவும் வீடியோ

Fact Check By: Chendur Pandian 

Result: False