சென்னை துறைமுகத்தில் சிங்கங்கள் நுழைந்ததா? வதந்தியால் பொதுமக்கள் பீதி!

சமூக ஊடகம் தமிழகம்

‘’சென்னை துறைமுகத்தில் நுழைந்த 3 சிங்கங்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் சில ஃபேஸ்புக் பதிவுகளை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link

உண்மை அறிவோம்:
இதுபற்றி வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ஏற்கனவே தகவல் பகிரப்பட்டதால் பொதுமக்களும் இது உண்மை என நம்பி அச்சம் அடைந்தனர். எனவே, இது உண்மையா, பொய்யா என்ற சந்தேகத்தில் பாலிமர் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் விரிவான செய்தி வெளியிட்டுள்ளன.

Polimer TV FB Link Archived Link 

இதேபோல, தினமலர் இணையதளம் வெளியிட்ட செய்தியில், ‘’மேற்கண்ட தகவலை சென்னை துறைமுக அதிகாரிகள் மறுத்துள்ளனர். இப்படி சமீப நாட்களாகவே, சில வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன, அவை அனைத்துமே பொய்யானவை,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Dinamalar News LinkArchived Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விஷமத்தனமாக வாட்ஸ்ஆப் வழியே சென்னை துறைமுகத்தில் சிங்கங்கள் உள்ளதாக தகவல் பகிர அதனை பலரும் உண்மை என நம்பி அச்சம் அடைந்துள்ளனர்.
2) இதுதொடர்பாக, பாலிமர் டிவி, தினமலர் உள்ளிட்ட ஊடகங்கள் ஏற்கனவே துறைமுக அதிகாரிகள், சென்னை போலீசாரிடம் விளக்கம் கேட்டு, அவற்றின் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:சென்னை துறைமுகத்தில் சிங்கங்கள் நுழைந்ததா? வதந்தியால் பொதுமக்கள் பீதி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •