சவுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்து கோவில் – குழப்பும் ஃபேஸ்புக் பதிவு

உலகம் சமூக ஊடகம்

சவுதி அரேபியாவில் சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…

தகவலின் விவரம்:

TEMPLE 2.png

Facebook Link I Archived Link

அகழ்வாராய்ச்சி செய்யும் இடம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், மண்ணில் புதையுண்ட விநாயகர் சிலை தெரிகிறது. மற்றொரு படத்தில் தொலைவில் மசூதி பேன்ற கட்டிடம் தெரிகிறது. அந்த படத்தின் மீது, “

திகைக்கவைத்த சவுதி அரேபியாவில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன், விநாயகர் கோவில்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, முத்து கிருஷ்ணன் என்பவர் ஜூன் 30, 2019 அன்று பதிவிட்டுள்ளார்.  இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினேம்… அப்போது இதே தகவல் ஷேர்சேட் என்ற சமூக ஊடகத்தில் அதிக அளவில் பகிரப்பட்டது தெரியவந்தது. நம்முடைய தேடலில் இந்த இடம் பற்றிய தகவலும் கிடைத்தது.

TEMPLE 3.png

இந்த பதிவில் உள்ள மசூதி போன்ற அமைப்பு தெரியும் படத்தை மட்டும் எடுத்து yandex.com-ல் பதிவேற்றி தேடினோம். அப்போது, இந்தோனேஷியாவின் யோக்யகர்த்தா என்ற இடத்தில் இந்து கோவில் கண்டெடுக்கப்பட்ட செய்தியில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. யோக்யகர்த்தா இந்து ஆலயம் என்று கூகுள் செய்தபோது, விக்கிப்பீடியா செய்தி ஒன்று கிடைத்தது. அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பயன்படுத்தப்பட்ட படம் இருந்தது.

TEMPLE 4.png

2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான நியூயார்க் டைம்ஸ் செய்தி ஒன்று கிடைத்தது. அதில், 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து கோவில் இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள இஸ்லாமிய பல்கலைக் கழகம் ஒன்று புதிய கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியுள்ளது. அப்போது, வித்தியாசமான முறையில் கல் தட்டுப்படவே, இது குறித்து அகழ்வாராய்ச்சி துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து ஆய்வு செய்து இரண்டு சிறிய கோவில்களைக் கண்டுபிடித்துள்ளனர். கட்டிடம் கட்டப்பட்ட விதத்தை வைத்து அவை 1100 பழமையானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

தமிழில் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். தினமலரில் செய்தி வெளியானதாக இருந்தது. ஆனால், அந்த யுஆர்எல் லிங்கை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், தினமலர் செய்தியைப் பலரும் பகிர்ந்திருந்தது தெரிந்தது. அந்த செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய ஆய்வில்,

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற படம் சௌதி அரேபியா இல்லை, இந்தோனேஷியா என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கோவில் 3000ம் ஆண்டு பழமையானது இல்லை. 1100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கூறிய செய்தி கிடைத்துள்ளது.

இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் மற்றும் தினமலர் வெளியிட்ட செய்தி கிடைத்துள்ளன.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.  

சவுதி அரேபியாவாக இருந்தால் என்ன… இந்தோனேஷியாவாக இருந்தால் என்ன… நம்முடைய பாரம்பரிய கோவில் வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதே மிகப்பெரிய மகிழ்ச்சிதான்!

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சவுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்து கோவில் – குழப்பும் ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False