முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "நம்ம வேலுமணி வீட்டில் கைபற்றிய சில்லறை காசுகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Sheik Ahamed Abdullah என்பவர் 2021 ஆகஸ்ட் 10ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு அரசின் முன்னாள் அமைச்சரும் அதிமுக நிர்வாகியுமான வேலுமணி வீடு உள்ளிட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சூழலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகை என்று படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2016ம் ஆண்டில் இருந்தே இந்த புகைப்படம் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. செய்தி ஊடகங்களில் வெளியான படங்களைக் கொண்டு ஆய்வு செய்தோம்.

அப்போது ஹிந்துஸ்தான் டைம்ஸ் இந்த படத்தைப் பயன்படுத்தி 2016ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. தெரிந்தது. கர்நாடக மாநிலத்தில் ஹவாலா டீலர் ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது சிக்கிய 5.7 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் மற்றும் 32 கிலோ நகைகள், 90 லட்ச ரூபாய் பழைய நோட்டுகள் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் இந்த புகைப்படத்தை பிடிஐ செய்தி நிறுவனம் எடுத்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர். பல வீடியோக்களும் நமக்கு கிடைத்தன.

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது சிக்கிய பணம் என்று சிலர் சமூக ஊடகங்களில் இதே படத்தை பகிர்ந்து வந்துள்ளனர். இது சேகர் ரெட்டி வீட்டில் எடுக்கப்பட்டது இல்லை என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்ததோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன் மூலம் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சிக்கிய பணம் என்று பகிரப்படும் படம் 2016ம் ஆண்டு கர்நாடகத்தில் நடத்த சோதனையின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

முடிவு:

எஸ்.பி.வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று பகிரப்படும் புகைப்படம் 2016ம் ஆண்டு கர்நாடகாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகளா இது?

Fact Check By: Chendur Pandian

Result: False