
‘’நடிகர் அஜித் விபத்துக்குள்ளான வீடியோ,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
இதே பதிவை மேலும் பலரும் வைரலாக பகிர்வதை காண முடிகிறது.
Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
Facebook Claim Link 4 | Archived Link 4 |
Facebook Claim Link 5 | Archived Link 5 |
இந்த வீடியோவை உண்மை என நம்பி ஜி இந்துஸ்தான் தமிழ் இணையதளமும் செய்தி வெளியிட்டிருந்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். மேலும், இந்த செய்தியை ஆதாரத்திற்காக நாம் ஆர்கிவ் செய்துள்ளோம்.
உண்மை அறிவோம்:
வலிமை படப்பிடிப்புத் தளத்தில் அஜித் காயமடைந்த செய்தி என்னவோ உண்மைதான். அதில் இருந்து மீண்டு, அவர் மீண்டும் படப்பிடிப்பில் தற்போது பங்கேற்று வருவதாகக் கூறி பல்வேறு ஊடகங்களில் செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.
News 18 Tamil Link | Puthiyathalaimurai Link |
ஆனால், இதுதொடர்பாக பகிரப்படும் வீடியோ வலிமை படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்டதல்ல. அது கடந்த 2012ம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்பட்டு வருவதாகவும். அந்த வீடியோ, மோட்டார் ஷோ ஒன்றில் எடுக்கப்பட்டதாகும்.
இந்த வீடியோவை எடுத்து, அஜித் காயம்பட்ட காட்சி என பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்கின்றனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் வீடியோ பற்றிய தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
