காதல் படத்தில் நடித்த சிறுவன் பற்றி Startamila இணையதளம் சொல்ல மறந்த கதை!

சினிமா

‘’காதல் படத்தில் நடித்த சிறுவனின் தற்போதைய நிலை,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook ClaimArchived Link 1 Startamila LinkArchived Link 2 

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியின் தலைப்பை பார்த்ததும், நமக்கும் இந்த சிறுவன் பற்றிய தகவலை தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், சம்பந்தப்பட்ட நியூஸ் லிங்கை கிளிக் செய்து படித்து பார்த்தபோது, சப்பென இருந்தது. ஆம், இந்த பொடியன் காதல் படத்தில் அறிமுகம் ஆனான், பின்னர் சிவகாசி உள்ளிட்ட படங்களில் நடித்தான் என்று எழுதியவர்கள், அதன் பின் என்ன ஆனான், தற்போது என்ன செய்கிறான் என்று எதுவுமே எழுதவில்லை.

ஒருவேளை பிரவுசர் கோளாறா என்ற சந்தேகத்தில் மீண்டும் ஒருமுறை ரிஃப்ரெஷ் செய்து பார்த்தோம். அப்போதும், இதே தகவல்தான் இருந்தது. இதன்படி, செய்தியில் பாதியை காணவில்லை என்று தெளிவாகிறது. ஒரு செய்தியை எழுத ஆரம்பித்தவர்கள் அதனை முழுவதும் எழுதி முடிக்காமல் பாதியிலேயே திடீரென மொட்டையாக முடித்துவிடுவது இன்றைய அவசர ஊடக வழக்கில் வழக்கமாக உள்ளது. அதற்கு சரியான உதாரணம் மேலே உள்ள செய்தி.

செய்தியின் தலைப்பில் உள்ளதுபோல கன்டென்ட் உள்ளே எந்த விளக்கமும் தரப்படவில்லை. 

இதே செய்தியை வேறு யாரேனும் வெளியிட்டுள்ளனரா என விவரம் தேடினோம். அப்போது, CineCafe என்ற இணையதளம் இந்த செய்தியை முழு விவரத்துடன் வெளியிட்டுள்ளதைக் கண்டோம். 

Cinecafe.in LinkArchived Link 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பரபரப்பிற்காக ஒரு செய்தியை கட், காபி, பேஸ்ட் செய்தவர்கள் அதில் உள்ள தகவலை முழுவதும் பகிராமல் விட்டுவிட்டனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தியில் முழு உண்மை இல்லை என உறுதி செய்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய முன்னுக்குப் பின் முரணான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:காதல் படத்தில் நடித்த சிறுவன் பற்றி Startamila இணையதளம் சொல்ல மறந்த கதை!

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •