யானை சின்னத்தில் அழுத்தினால் தாமரை சின்னத்திற்கு ஓட்டு பதிவானது: வைரல் வீடியோ

சமூக ஊடகம்

‘’யானை சின்னத்திற்கு ஓட்டுப் போட்டால் தாமரை சின்னத்திற்கு ஓட்டு பதிவானது,’’ என்று கூறி ஒரு சர்ச்சையான வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Archived Link

Tamil Entertainment என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் மேலே, ‘’ இப்படி இருந்தா 300 தொகுதியென்ன…3000 தொகுதி கூட ஜெய்ப்பீங்கடா,’’ என்றும் எழுதியுள்ளனர். இதனை உண்மை என நம்பி, பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவை மேலோட்டமாகப் பார்த்தால் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம்தான். ஆனால், சற்று கூர்ந்து கவனத்தால் ஒரு உண்மை புரியும், அதாவது வீடியோவில் வாக்குப் பதிவு செய்யும் பெண், தனது கட்டை விரலை தாமரை சின்னத்தில் வைத்து அழுத்துகிறார். லைட் எரிந்த பிறகு, மற்றொரு விரலால் யானை சின்ன பொத்தானை அழுத்துகிறார். ஒருமுறைதான் வாக்கு பதிவாகும் என்ற நிலையில், வேண்டுமென்றே தேர்தல் ஆணையம், வாக்குப் பதிவு இயந்திரம், பாஜக மீது பழிபோடும் வகையில், அவர் இப்படி 2வது முறை யானை சின்னத்தில் ஓட்டுப் போட முயற்சித்துள்ளார். இதற்காக, தாமரை சின்னத்தில் ஓட்டுப் போட்டதை மறைக்கும் வகையில், இடது கை கட்டை விரலை வெளியே தெரியாதபடி மடக்கி வைத்து அழுத்துகிறார்.

C:\Users\parthiban\Desktop\bjp scam 2.png

இதைப் படிக்கும் நீங்களே ஒருமுறை இடது கையை இந்த வீடியோவில் வருவதுபோல மடக்கி, செய்து பாருங்கள். கட்டை விரலை மறைத்து வைத்துக் கொண்டு தாமரை சின்னத்தில் முதலில் அழுத்திவிட்டு, பிறகு மற்றொரு விரலை வைத்து யானை சின்னத்தில் அவர் அழுத்துகிறார்; இதை மறைக்க வீடியோ எடுத்து, தேர்தல் ஆணையம் மீது அவர் பழிபோடுகிறார் என்பதும் எளிதாக உங்களுக்கு புரியும். இத்தனைக்கும் நாம் முதலில் எந்த சின்னத்தில் அழுத்துகிறோமோ, அந்த சின்னத்தில்தான் லைட் எரியும் என்றுகூட அறியாதவர்களாக, பலரும் இந்த வீடியோவை உண்மை என ஷேர் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, ஏற்கனவே நமது மலையாள டீம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அதன் முடிவுகளை சமர்ப்பித்துள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:யானை சின்னத்தில் அழுத்தினால் தாமரை சின்னத்திற்கு ஓட்டு பதிவானது: வைரல் வீடியோ

Fact Check By: Parthiban S 

Result: False