பாஜக செய்தித் தொடர்பாளர் உள்ளாடையுடன் ஆடும் வீடியோ?- உண்மை அறிவோம்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’பாஜக செய்தித்தொடர்பாளர் உள்ளாடையுடன் ஆடும் வீடியோ,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதன் விவரம் இங்கே செய்தியாக தொகுத்து தரப்பட்டுள்ளது.

தகவலின் விவரம்:

Facebook Link Archived Post LinkArchived Video Link 

Madhu Soodhanan

என்பவர் அக்டோபர் 8, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், குடிபோதையில் உள்ளாடையுடன் ஆண் ஒருவர் ஆபாச நடனமாடுகிறார். அவருடன் பெண் ஒருவரும் கம்பெனி கொடுக்கிறார். இதில் இருப்பவர் பாஜக செய்தித் தொடர்பாளர் சுதன்ஷூ திரிவேதி எனக் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் சுதன்ஷூ திரிவேதி. பாஜக.,வின் ராஜ்ய சபா உறுப்பினராக உள்ள இவர், அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார்.

இந்நிலையில்தான் இவரது வீடியோ எனக் கூறி மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ பகிரப்பட்டுள்ளது. உண்மையில் அவர் சுதன்ஷூ திரிவேதி கிடையாது.

அடையாளம் தெரியாத நபரின் இந்த வீடியோ பல்வேறு மொழிகளிலும் பரவி வருகிறது. மலேசியா நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவர் பகிர்ந்திருந்த பதிவில் இதில் இருப்பவர் மலேசிய அரசு அதிகாரி எனக் கூறியிருந்தார். ஆனால், அதுவும் உண்மையில்லை. 

Facebook Link Archived Link

எனவே, இந்த வீடியோவில் இருப்பவர் சுதான்ஷூ திரிவேதி கிடையாது என தெளிவாகிறது. இதே வீடியோ இந்தியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பலரது பெயரை சொல்லி பகிரப்பட்டு வருகிறது. இதனை இந்திய ஃபேஸ்புக் பயனாளர்கள் தங்களது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி, தவறான தகவலை பரப்பியுள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது. 

மேற்கண்ட வீடியோ தொடர்பாக ஏற்கனவே, ஆங்கிலத்தில் ஆல்ட் நியூஸ் இணையதளம் உண்மை கண்டறியும் சோதனை செய்து, முடிவுகளை சமர்ப்பித்துள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, வீடியோ மற்றும் புகைப்படம் போன்றவற்றை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பாஜக செய்தித் தொடர்பாளர் உள்ளாடையுடன் ஆடும் வீடியோ?- உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False