‘’இந்திய ராணுவத்திற்கு தேவையான ஷூக்களை இஸ்ரேலில் இருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மோசடி செய்துள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
இதுபற்றி நாம் தகவல் தேடியபோது, கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று ABP News ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றை காண நேரிட்டது. அதில், ‘’இந்திய ராணுவம் ஷூ இறக்குமதி செய்வதில் ஊழல் செய்ததாக பகிரப்படும் தகவல் பற்றி பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர்கள், இந்திய ராணுவத்தில் 6 வகையான ஷூக்களை பயன்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டனர். அவற்றில், 4 வகையான ஷூக்கள், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் நேரடியாக, இந்திய உற்பத்தியாளர்களிடம் இருந்தே வாங்கப்படுகின்றன. எஞ்சிய 2 ஷூக்கள், Anti Mines Boots (Rs.1 lakh price/approx) மற்றும் Specialised Shoes (Rs.11,000 price/approx) மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதேசமயம், இந்த புகைப்படம் பற்றிய செய்தியில் கூறப்படுவது போல, இந்திய ராணுவத்திற்கு, இஸ்ரேலில் இருந்து ஷூ எதுவும் இறக்குமதி செய்யப்படுவதில்லை; உண்மையில், ரூ.25,000 விலையில் வாங்கப்படும் இந்த ஷூக்கள், இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் நம்மிடையே தெரிவித்தனர்,’’ என்று கூறியுள்ளனர்.

ABP News Link

எனவே, 2017ம் ஆண்டு முதலே மேற்கண்ட வதந்தி பரவி வருவதாக, நமக்கு தெரியவருகிறது. இதுபற்றி இதர ஃபேக்ட்செக் ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

Facthunt link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:இந்திய ராணுவத்திற்கு தேவையான ஷூ தயாரிப்பதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் செய்ததா?

Fact Check By: Pankaj Iyer

Result: False