இந்த தொப்பியை சீனா தயாரிக்கவில்லை என்று தகவல்!
‘’இந்த தொப்பியை சீனாதான் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்கிறது,’’ என்று கூறி ஒரு புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
மேற்கண்ட தகவல் உண்மையா எனக் கேட்டு நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் நமக்கு அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை வைரலாக பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.
உண்மை அறிவோம்:
Boycott China என்று எழுதியுள்ள தொப்பியையும், அதன் பின்புறத்தில் Made In China என்று உள்ளது போலவும் கூறி மேற்கண்ட புகைப்படத்தை பலரும் பகிர்கின்றனர். இந்த தொப்பி ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுவது போலவும் கூறியுள்ளனர்.
ஆனால், நீண்ட நேரம் தேடியும், Flipkart ஆன்லைன் விற்பனை தளத்தில் எந்த புகைப்படமும் இதுபோன்று பார்க்க கிடைக்கவில்லை. ஒருவேளை, Baseball cap ஒன்றின் படத்தை எடுத்து எடிட் செய்திருக்கலாம், அல்லது சீனா பெயரில் வேறு யாரேனும் விற்றிருக்கலாம் என தெரியவருகிறது.
இந்த Boycott China தொப்பி விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. எனவே, இதன் பேரில், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகாரப்பூர்வ ஊடகமான Global Times விளக்கம் அளித்து, செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இதன்படி, சீனா – இந்தியா விவகாரத்தை முன்னிறுத்தி சிலர் வேண்டுமென்றே இத்தகைய விஷமத்தனமான ஆன்லைன் விற்பனையை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
ஏனெனில், இதுபற்றி Global Times விரிவான ஆய்வு நடத்தி, செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதன் அடிப்படையில் மேற்கண்ட தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, Boycott China தொப்பிகள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன என்ற மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.