‘’ மோடி அறிவித்தபடி 1098 என்ற எண்ணிற்கு அழைத்தால் வீணாகும் உணவை வாங்கிக் கொள்வார்கள்,’’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இந்த செய்தியை உண்மை போல பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

1098 என்பது சிறார் அவசர உதவி சேவை வழங்கக்கூடிய தொடர்பு எண் ஆகும். ஆபத்தில் உள்ள சிறுவர் சிறுமிகள் இந்த எண்ணிற்கு அழைத்தால், அவர்களுக்கு தேவையான உதவி வழங்கவே, 1098 இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

ஆனால், இதற்கும், மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வதந்தி கடந்த சில ஆண்டுகளாகவே, பகிரப்படும் ஒன்றாகும்.

இதுபற்றி ஏற்கனவே மத்திய அரசின் கீழ் செயல்படும் @PIBFactCheck மறுப்பு வெளியிட்டுள்ளது.

Childline எண்ணிற்கு, தொடர்ச்சியாக இத்தகைய தவறான அழைப்புகள் வருவதாக, அவர்களது தரப்பிலும் ஏற்கனவே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

business-standard link

கூடுதல் ஆதாரத்திற்காக, நாமும் 1098 எண்ணை தொடர்பு கொண்டோம். நம்மிடம் பேசிய ஊழியர் ஒருவர், ‘’இது தவறான தகவல். இதுபற்றி நாங்கள் பலமுறை விளக்கம் அளித்துள்ளோம். நாங்கள் இப்படியான உணவு சேவை எதுவும் வழங்கவில்லை. எங்களுக்கு பலரும் அடிக்கடி இவ்வாறான அழைப்பு மேற்கொண்டு சிரமப்படுத்துகின்றனர். எவ்வளவு சொன்னாலும் புரிந்துகொள்வதில்லை,’’ என்றார்.

இதன்படி, பல ஆண்டுகளாகவே, இந்த வதந்தி பரவி வருகிறது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மோடி அறிவித்தபடி 1098 என்ற எண்ணிற்கு அழைத்தால் வீணாகும் உணவை வாங்கிக் கொள்வார்களா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False