மோடியின் தியானம்- குகையே இல்லையாம்… குழப்பும் ஒன் இந்தியா செய்தி!

மீடியா

‘’மோடியின் தியானம்- குகையே இல்லையாம்… அரசின் குகை மாடல் கெஸ்ட் ஹவுஸாம்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\modi cave 2.png

Archived Link

இதே செய்தியை, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திலும் விரிவாக வெளியிட்டுள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link

இந்த செய்தி மே 19ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.  
உண்மை அறிவோம்:
ஒன் இந்தியா செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல, பிரதமர் மோடி, கேதார்நாத் சென்று, அங்கு ருத்ரா என்ற குகையில் தியானம் செய்தது உண்மைதான். மே 18ம் தேதி அவர் இந்த தியானம் செய்தார். இதுபற்றி இங்கே கிளிக் செய்யவும். இதையடுத்து, சமூக ஊடகங்களில் புதுப்புது வதந்திகள் பரவ தொடங்கின.

இந்நிலையில், இந்த குகை பற்றி, இதனை நிர்வகித்து வரும் உத்தரகாண்ட் மாநில அரசுக்குச் சொந்தமான கர்வால் மண்டல் விகாஸ் நிகாம் நிறுவனம் விரிவான விளக்கம் அளித்துள்ளது. அந்த தகவலில், ருத்ரா குகை இயற்கையாக உருவான ஒன்றுதான் என்றும், அதன் வெளிப்புற பகுதிகளை நவீன பயன்பாட்டிற்கு ஏற்ப திருத்தம் செய்து, வெளிப்புறத்தில் கதவு அமைத்து, உள்புறத்தில் சில நவீன வசதிகளை சேர்த்தும் உள்ளதாக, அந்நிறுவனம் கூறியுள்ளது.

எனவே, இது இயற்கையான குகைதான். கெஸ்ட் ஹவுஸ் கிடையாது. தற்போதும் குகை என்ற அளவில்தான், சுற்றுலா வருவோருக்கு வாடகைக்கு விடப்படுகிறது. இதன் ஒருநாள் வாடகை முதலில், ரூ.3000 வரை நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப, ரூ.990 ஆகக் குறைக்கப்பட்டதாக, மண்டல் விகாஸ் நிகாம் குறிப்பிட்டுள்ளது.

C:\Users\parthiban\Desktop\modi cave 3.png

இதுதொடர்பாக, விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். எனவே, ஒன் இந்தியா செய்தியில் உள்ளதுபோல, இது செயற்கை குகை இல்லை என்பதும், இது கெஸ்ட் ஹவுஸ் இல்லை என்பதும் தெளிவாகிறது. இந்த செய்தியின் தலைப்பு மட்டுமல்ல, உள்ளே கூறப்பட்டுள்ள விசயங்களிலும் இந்த விசயம் கலந்துள்ளதால், இதில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் கலந்துள்ளதாக, தெரிகிறது.

இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, ஒன் இந்தியா தமிழ் வெளியிட்ட செய்தியில், பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட செய்தி பாதி உண்மை, பாதி தவறான தகவல் கலந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நம்முடைய வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மோடியின் தியானம்- குகையே இல்லையாம்… குழப்பும் ஒன் இந்தியா செய்தி!

Fact Check By: Parthiban S 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •