
‘’ரன் அவுட்டில் தொடங்கி, ரன் அவுட்டில் முடிந்தது தோனி கேரியர்,’’ எனக் கூறி சமூக ஊடகங்களில் பலரும் வைரலான ஒரு தகவலை பகிர்ந்து வருகின்றனர். இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

ஹாமிது யுவன் என்பவர் இந்த பதிவை ஜூலை 10, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், ‘’ Started his career with a run-out and ends his career with a run-out ! Thank You Dhoni for everything. End of an Era :'( ,’’ என பதிவிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை போல வேறு யாரேனும் தகவல் பகிர்ந்துள்ளார்களா என ஃபேஸ்புக்கில் ஆதாரம் தேடினோம். அப்போது பலர் இதுபோன்ற பதிவை வெளியிட்ட விவரம் கிடைத்தது.

ஆனால், இவர்கள் சொல்வது போல, தோனியின் முதல் மேட்ச் ரன் அவுட்டில் தொடங்கப்பட்டதா என தேடிப் பார்த்தோம். அப்போது, கடந்த 2004ம் ஆண்டு முதன்முதலாக, பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டியில் தோனி அறிமுகமானதாக தகவல் கிடைத்தது. அதில், அவர் ரன் அவுட்தான் செய்யப்பட்டார். அதற்கான வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.
இதேபோல, இவர்கள் குறிப்பிடும் கடைசி ரன் அவுட், நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டியில் நிகழ்ந்ததாகும். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த பரபரப்பு போட்டியில் தோனி ரன் அவுட் முறையில் வெளியேறியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை இந்த ரன் அவுட்டுடன் முடிந்துவிட்டதாக பலரும் வதந்தி பரப்ப தொடங்கியுள்ளனர். ஆனால், இதில் உண்மை இல்லை. தோனி இன்னமும் தனது ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. பிசிசிஐ போன்ற யாரும் அவரை ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்தவில்லை. பிசிசிஐ நிர்வாகம், தற்போது வரையிலும் தோனிக்கு ஆதரவாகவே உள்ளது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
எனவே, தோனி இன்னமும் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை, அவர் மேலும் கிரிக்கெட் விளையாடுவார். அவராக அறிவிக்கும் வரை இதில் எந்த முடிவுக்கும் வர முடியாது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, தோனி இன்னமும் தனது ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. அவர் வரும் நாட்களிலும் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவுகளில் கூறப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் தோனியின் கிரிக்கெட் வாழ்வு இன்னமும் முடியவில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உணர்ச்சிவசப்பட்டு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ரன் அவுட்டில் தொடங்கி, ரன் அவுட்டில் முடிந்த தோனி கேரியர்: உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False
