
‘’2023 உலக கோப்பை வரை விளையாடுவேன்,’’ என்று தோனி சொன்னதாகக் கூறி, ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link1 I Archived Link2
Karthik Siva என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஓய்வு குறித்த கேள்விக்கு 2023 உலக கோப்பை போட்டியில் பதில் கிடைக்கும் என்று தோனி அதிரடி பதில் கூறினார் எனக் குறிப்பிட்டுள்ளனர். இதன் மேலே, ‘’Apadi solra en chellakutty ? ?? ?? ?? ?? ?? ? . Nanga eppavum masstha en chipsu. Adutha wc namma vaangarom thala???’’ என்றும் எழுதியுள்ளனர். நியூஸ் 7 தொலைக்காட்சி பெயரை பயன்படுத்தி இந்த பதிவை வெளியிட்டுள்ளதால் பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பலர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்யும் அதே நேரத்தில் சிலர் இது போலியான தகவல் என கமெண்ட் பகிர்ந்துள்ளனர்.

உலக கோப்பை அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தோனி ஓய்வு பெறுகிறார் என்றும், தோனி ஓய்வு பெறவில்லை என்றும் கூறி வித விதமான வதந்திகள் ஃபேஸ்புக்கில் பரவி வருகின்றன. இதுபற்றி நாம் ஏற்கனவே ஒரு உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளோம். இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுதவிர, தோனியின் ஓய்வு பற்றி கேள்விகளுக்கு, விராட் கோலி ஏற்கனவே பதில் அளித்துள்ளார்.
அதேசமயம், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், தோனி இதுவரை செய்தியாளர்களை சந்தித்து எதுவும் பேசவும் இல்லை. தனது ஓய்வு பற்றி எந்த விளக்கமும் அளிக்கவும் இல்லை. இவர்கள் பகிர்ந்துள்ள நியூஸ் கார்டு போலியாக தயாரிக்கப்பட்டதாகும். இது உண்மையானது இல்லை.
இதுதொடர்பாக, எதற்கும் சந்தேகத்தின் பேரில் கூகுளில் செய்தி ஆதாரம் தேடினோம். ஆனால், அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

தோனி பற்றி வெளியாகும் பல்வேறு தகவல்களை மறுத்து, இந்தியா டுடே வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இருந்தாலும் சந்தேகத்தின் பேரில் ஒருமுறை Yandex இணையதளத்தில் குறிப்பிட்ட நியூஸ் கார்டை பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அதில், இந்த புகைப்படம் பற்றி செய்தி விவரம் கிடைத்தது.

இதன்படி, 2015, மார்ச் 9ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து தவறான நியூஸ்கார்டை தயாரித்து பகிர்ந்துள்ளனர் என்று தெரியவந்தது. இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:2023 உலக கோப்பை வரை விளையாடுவேன் என்று தோனி சொன்னாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
