முன்னாள் அமைச்சர் பொன்முடி குத்தாட்டம்; வைரல் வீடியோவின் முழு உண்மை இதோ!

அரசியல் தமிழகம்

‘’முன்னாள் அமைச்சர் பொன்முடி குத்தாட்டம்,’’ என்ற தலைப்பில் டிரெண்டிங் ஆகியுள்ள ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link 

இந்த பதிவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும் முன்பாக, இதே வீடியோ பற்றி கடந்த 2019ம் ஆண்டில் வெளியான மற்றொரு செய்தியையும் கண்டோம். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

FB LinkArchived Link 1Asianet News LinkArchived Link 2

உண்மை அறிவோம்:
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, பொன்முடி நள்ளிரவில் தனது ஆதரவாளர்களுடன் கொண்டாடியதாக, முதலில் உள்ள ஃபேஸ்புக்கில் கூறியுள்ளனர். 

இதேபோல, 2019ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி இதே வீடியோவை இணைத்து செய்தி வெளியிட்டுள்ள ஏசியாநெட் தமிழ் நியூஸ், பொன்முடி தேர்தல் பிரசாரத்தின்போது தொண்டர்களுடன் குத்தாட்டம் போட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. 

ஆனால், உண்மை என்னவெனில், இந்த 2 கிளெய்ம்களும் தவறாகும். ஏனெனில், பொன்முடி நடனமாடும் வீடியோ உண்மையில், கடந்த 2017ம் ஆண்டில் திருக்கோவிலூர் பகுதியில் நடைபெற்ற பொங்கல் பண்டிகையின்போது எடுக்கப்பட்டதாகும். இதுபற்றி அப்போதே ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 

இதேபோல, தந்தி டிவி வெளியிட்ட வீடியோ செய்தியும் கீழே தரப்பட்டுள்ளது. 

இதன்படி, 2017ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி விவசாயிகளுடன் பொன்முடி உற்சாகமாக ஆடியுள்ளார். இதனை அந்த மேடையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் இருந்தே எளிதாக அடையாளம் காணலாம். 

எனவே, பழைய வீடியோவை எடுத்து 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்துடன் தொடர்புபடுத்தி ஏசியாநெட் தமிழ் இணையதளம் தவறான செய்தி வெளியிட்டிருக்கிறது. இதே வீடியோவை தற்போதைய 2020 கொரோனா ஊரடங்கு டாஸ்மாக் திறப்புடன் தொடர்புபடுத்தி ஃபேஸ்புக்கில் சிலர் பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்திகளில் இடம்பெற்றுள்ள வீடியோ பற்றிய தகவல் தவறு என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:முன்னாள் அமைச்சர் பொன்முடி குத்தாட்டம்; வைரல் வீடியோவின் முழு உண்மை இதோ!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •