‘’முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏப்ரல் ஃபூல் செய்த விஜய்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

விஜய் மக்கள் இயக்கம் நைஜீரியா என்ற ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ‘’நடிகர் விஜய், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கொரோனா வைரஸ்க்கு ரூ.250 கோடி தருகிறேன் என்று சும்மா சொன்னேன். 10 பைசா தரமாட்டேன். ஏப்ரல் ஃபூல்,’’ என்று சொன்னதாகக் கூறியுள்ளனர்.

நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு ஒன்றையும் இணைத்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் ஏற்கனவே விஜய், கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக ரூ.300 கோடி அளித்தார் என்று வதந்தி பரப்பியிருந்தனர். அதுபற்றி நாம் ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை நடத்தி முடிவை சமர்ப்பித்திருக்கிறோம். அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இருந்தாலும், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேரில் சந்தித்தது போலவும், அவரிடம் கொரோனா வைரஸ்க்கு 10 பைசா கூட தரமாட்டேன். ரூ.250 கோடி தருவதாக பொய் சொன்னேன், ஏப்ரல் ஃபூல், என்று கூறிவிட்டார். விஜய் அண்ணா மாஸ், என்று எழுதியுள்ளனர். இது வேடிக்கையாக இருந்தாலும், மிகவும் விஷமத்தனமான செயலாக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வரும் தகவலால் மக்கள் பீதியில் உறைந்து போயிருக்கும் ஒரு சூழலில், சமூக பொறுப்பு ஏதுமின்றி, இப்படியெல்லாமா மரண மொக்கை போடுவார்கள், என்ற கோபமே நமக்குள் எழுகிறது.

இப்படி ஏதேனும் செய்தியை நியூஸ்7 தமிழ் ஊடகம் ஏதேனும் செய்தி வெளியிட்டுள்ளதா என தகவல் தேடினோம். அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. சிவகார்த்திக்கேயன், கொரோனா நிவாரணத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி கொடுத்தார் என்ற செய்தியை மட்டுமே காண நேரிட்டது.

News7 Tamil LinkArchived Link

எனவே, ஏப்ரல் 1ம் தேதி முன்னிட்டு விஜய் பற்றி நியூஸ்7 தமிழ் எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று தெளிவாகிறது. இதுபற்றி நியூஸ் 7 தமிழ் ஆன்லைன் பிரிவில் விளக்கம் கேட்டோம். ‘’நாங்கள் இப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை. போலியான செய்தி,’’ என்று கூறிவிட்டனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு நடத்திய ஃபேஸ்புக் பதிவில் போலியாகச் சித்தரிக்கப்பட்ட தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏப்ரல் ஃபூல் செய்த விஜய்?- ஃபேஸ்புக் விஷமம்!

Fact Check By: Pankaj Iyer

Result: False