வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்தால் போராட்டம் வெடிக்கும்: துரைமுருகன் எச்சரிக்கை

அரசியல் சமூக ஊடகம்

‘’ வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்தால் போராட்டம் வெடிக்கும்- துரைமுருகன் எச்சரிக்கை,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\duraimurugan 2.png

Facebook Link I Archived Link

Sathiyam TV இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளது. இதனுடன் அந்த தொலைக்காட்சியின் இணையதள செய்தி ஒன்றின் லிங்கும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இந்த செய்தியை வைரலாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

C:\Users\parthiban\Desktop\duraimurugan 3.png

இதேபோல, வேறு யாரேனும் செய்தி வெளியிட்டுள்ளனரா என தகவல் தேடிப் பார்த்தோம். அப்போது, தினமலர் இணையதளம் வெளியிட்ட செய்தி ஒன்றின் லிங்க் கிடைத்தது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\duraimurugan 4.png

இதேபோல, SeithiSolai Tamil என்ற ஃபேஸ்புக் ஐடியும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

C:\Users\parthiban\Desktop\duraimurugan 5.png

மேற்கண்ட செய்தியை இணையதளத்திலும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\duraimurugan 6.png

உண்மை அறிவோம்:
நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவுகள் அனைத்திலுமே, மொட்டையாக, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்தால் போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், உண்மை இதுவல்ல. இந்த விவகாரத்தில் துரைமுருகன் அளித்த பேட்டியை எல்லோருமே மொட்டையாக பகிர்ந்துள்ளனர். உண்மை என்னவெனில், ஜோலார்பேட்டையில் இருந்து, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மூலமாக வரும் நீரை எடுத்தால்தான் போராட்டம் ஏற்படும் என்றே துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரே விளக்கமும் அளித்துள்ளார். இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளது. இதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\duraimurugan 7.png

இதே செய்தியை, தந்தி டிவியும் வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். அதாவது, காவிரி கூட்டுக்குடிநீரை எடுத்துச் சென்றால் மக்கள் போராடுவார்கள் என்றுதான் துரைமுருகன் கூறியுள்ளார்.

C:\Users\parthiban\Desktop\duraimurugan 8.png

இந்த செய்தியில் ஒரு வீடியோ இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்தால் உங்களுக்கே புரியும். அதில், துரைமுருகன் பேசியதும், நிருபர்களின் கேள்வி விவரமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நிருபர்: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீரை எடுத்து செல்வதாக கூறியுள்ளனர்?

துரைமுருகன்: அது இந்த தண்ணீர் அல்ல.. வேற தண்ணீர்.. நிலத்தடி நீர்.

நிருபர்: இல்லை சார். ஜோலார்பேட்டையில் ஆய்வுகள் நடந்து வருகிறது . காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீரை 10 மில்லியன் லிட்டர் அளவிற்கு சென்னைக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்ல ஆய்வுகள் நடக்கிறது.துரைமுருகன்: அப்படி.. இந்த தண்ணீரை எடுத்துச் செல்ல இருந்தால் மாவட்டம் தழுவிய மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.

இதுதான் துரைமுருகன் பேசியதாகும். இதனை தவறாக திரித்து செய்தி வெளியிட்டதன் மூலமாக, பலரும் மக்களை குழப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்திகளில் முழு விவரம் கூறப்படவில்லை. எனவே, இவற்றில் நம்பகத்தன்மை இல்லை என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவுகளில் முழு உண்மை கூறப்படவில்லை என நிரூபிக்கப்படவில்லை. இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை நமது வாசகர்கள் யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்தால் போராட்டம் வெடிக்கும்: துரைமுருகன் எச்சரிக்கை

Fact Check By: Pankaj Iyer 

Result: Mixture