எடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் தவறான பேனர் புகைப்படம்!
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் பேனர் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இதனை பலரும் உண்மை என ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.
இதேபோல, ட்விட்டரிலும் ஏராளமானோர் இதனை உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சாமானின் முதல்வர் எனக் கூறி உண்மையிலேயே அதிமுகவினர் பேனர் அச்சடித்திருந்தனரா என்ற சந்தேகத்தில் தேடுதலில் ஈடுபட்டோம். இதுபற்றி நமது ஊடக நண்பர் ஒருவரின் உதவியுடன், அஇஅதிமுக ஐடி பிரிவு தரப்பில் விளக்கம் கேட்டோம்.
அப்போது அவர்கள், ‘’செப்டம்பர் 28 அன்று கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, கழக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று தொண்டர் ஒருவர் கையில் ஏந்தியிருந்த பேனர்தான் இது. இதில், ‘’சாமானின்’’ என்றெல்லாம் குறிப்பிடவில்லை. ‘’சாமானிய’’ என்றே இருந்தது. இதுபற்றிய அதிமுக ஆதரவாளர்கள் பலரும் விளக்கம் அளித்திருப்பதை சமூக வலைதளங்களில் நீங்களே காணலாம்,’’ எனக் குறிப்பிட்டனர்.
எனவே, இதுபற்றி நாமும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் விவரம் தேடினோம். அப்போது, சவுக்கு சங்கர் என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி நிகழ்ந்த காரசாரமான விவாதங்களையும் கண்டோம். அதில், இது ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது என சிலர் ஆதார புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர்.
இதற்கடுத்தப்படியாக, இதுபற்றி அஇஅதிமுக ஐடி பிரிவினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலர் விளக்கம் அளித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டதையும் இங்கே இணைத்துள்ளோம்.
Facebook Post Link I Archived Link
இதன் தவறை உணர்ந்த சிலர், தங்களது பதிவை நீக்கிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்ததை ட்விட்டரில் காண முடிந்தது.
சிலர் தங்களது தவறை உணர்ந்து, பதிவை நீக்கினாலும் பலர் இன்னமும் இதனை உண்மை என்றே நம்பி தகவல் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இது எடிட் செய்யப்பட்ட ஒன்றுதான் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Title:எடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் தவறான பேனர் புகைப்படம்!
Fact Check By: Pankaj IyerResult: Altered