திமுக பற்றி பகிரப்படும் எடிட் செய்யப்பட்ட போஸ்டர்!

அரசியல் சமூக ஊடகம்

‘’என்றும் எதிர்க்கட்சி தலைவராக தளபதி ஸ்டாலின்,’’ என்று கூறி பகிரப்படும் திமுக போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதில், ‘’என்றும் எதிர்க்கட்சி தலைவராக தளபதி அவர்கள் தான் என்பது மக்கள் முடிவு செய்துள்ளனர். சு. சண்முகம். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்,’’ என எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் காண முடிகிறது. 

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2

உண்மை அறிவோம்:
மேற்கண்ட போஸ்டர் புகைப்படத்தை நன்கு கவனித்தபோது, அதில் உள்ள ‘’எதிர்க்கட்சி‘’ என்ற வார்த்தை மட்டும் ஃபாண்ட் மற்றும் கலர் வித்தியாசத்துடன் உள்ளதைக் கண்டோம். இதன்பேரில், திமுக தரப்பில் விளக்கம் பெற தீர்மானித்தோம்.

இதில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரின் பெயரை குறிப்பிட்டுள்ளதால், இதுபற்றி திமுக இளைஞர் அணி தரப்பிலேயே விளக்கம் பெற முயற்சித்தோம். இதன்படி நம்மிடம் பேசிய திமுக இளைஞர் அணி நிர்வாகி ஒருவர், ‘’இது போலியான தகவல். உண்மையான போஸ்டர் வேறு ஒன்றாகும்,’’ என்று கூறி அதன் விவரத்தையும் நமக்கு அனுப்பி வைத்தார். 

இதன்படி, உண்மையான போஸ்டரை எடுத்து, எடிட் செய்து இவ்வாறு பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.

அதனை மீண்டும் ஒருமுறை பெரிதுபடுத்தி, கீழே இணைத்துள்ளோம். 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள். 

Avatar

Title:திமுக பற்றி பகிரப்படும் எடிட் செய்யப்பட்ட போஸ்டர்!

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply