
‘’பேனர் வைக்க வேண்டாம் என கூறிய தளபதிக்கு வாழ்த்துகள்,’’ என்று கூறி திமுகவினர் பேனர் வைத்ததாகக் கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
Phone Wire Pinchi Oru Vaaram Aachu என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின் பேனர் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, இப்படிக்கு தளபதியின் விழுதுகள், என எழுதியுள்ளனர். பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், தற்போதைய பரபரப்புச் செய்தியின் பின்னணியில் இதை வெளியிட்டுள்ளதால், இந்த புகைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.
உண்மை அறிவோம்:
சென்னை பள்ளிக்கரணையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதற்கு, ஆளும் அதிமுக கட்சி நிர்வாகி ஒருவரே காரணம் என்று கூறி பல தரப்பிலும் விமர்சிக்கப்படுகிறது.
இதையடுத்து, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சி நிர்வாகிகள் சாலையோரம் அனுமதியின்றி பேனர் வைக்க வேண்டாம் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர்.
Archived Link |
இதன்பேரில், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதியை விமர்சித்துக் கூட ஒரு போலி செய்தி வெளியானது. அதனை நாம் ஆய்வு செய்து, தவறு என நிரூபித்துள்ளோம். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில்தான், தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்தும் மேற்கண்ட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இது நகைச்சுவையாக இருந்தாலும் அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுவதாக உள்ளது.
திமுகவினர் பேனர் வைக்கக்கூடாது என்று வலியுறுத்திய அரசியல் தலைவர்களில் மு.க.ஸ்டாலினும் ஒருவர். அவரை கிண்டல் செய்துதான் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும் வெளியிடப்பட்டுள்ளது.
இது ஒரு ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படமாகும். ஆம், இதன் உண்மையான புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நடப்பு செய்தியின் ஊடே தவறான புகைப்படத்தை சித்தரித்து, பகிர்ந்துள்ளனர் என, உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் தவறாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பேனர் வைக்க மாட்டோம் என்று கூறி திமுகவினர் பேனர் வைத்தார்களா?
Fact Check By: Pankaj IyerResult: False
