சந்திரயான் 2 முதன் முதலாக அனுப்பிய பூமியின் புகைப்படங்கள்: உண்மை அறிவோம்!

அரசியல் சார்ந்தவை

‘’சந்திரயான் 2 முதன் முதலாக அனுப்பிய பூமியின் புகைப்படங்கள்,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் புகைப்படங்களை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\earth 2.png

Facebook Link I Archived Link

Natesan Rajagopalan என்பவர் ஜூலை 27, 2019 அன்று இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேலே உள்ள செய்தியை போல வேறு யாரேனும் பதிவு வெளியிட்டுள்ளனரா என்ற சந்தேகத்தில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடிப் பார்த்தோம். அப்போது நிறைய பேர் இதே செய்தி, புகைப்படத்தை வைரலாக பகிர்ந்து வருவதாக தெரியவந்தது.

C:\Users\parthiban\Desktop\earth 3.png

ஆனால், இவர்கள் சொல்வது போல இவை சந்திரயான் 2 அனுப்பிய புகைப்படங்கள் கிடையாது. இதில் உள்ள முதலாவது புகைப்படம், கடந்த 2009ம் ஆண்டு ரஷ்யாவின் குரில் தீவில் உள்ள சாரிசெவ் எரிமலை வெடித்து, புகை, நீராவி, சாம்பலை வெளியிட்டபோது சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அதற்கான வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக உள்ள 2வது புகைப்படம், கடந்த சில ஆண்டுகளாகவே, இணையத்தில் பரவி வருவதாகும். இது சந்திரயான் 2 அனுப்பியது கிடையாது.

C:\Users\parthiban\Desktop\earth 4.png

இதேபோல, மற்றொரு புகைப்படம் இணையத்தில் வெளியான அனிமேஷன் வீடியோ ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாகும். Flight over the morning Earth என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

https://www.shutterstock.com/video/clip-12661208-flight-over-morning-earth

மற்றொரு புகைப்படம் நாசாவால் படம்பிடிக்கப்பட்ட அன்டார்க்டிகா கண்டமாகும். அதுவும் பல ஆண்டுகளாகவே, இணையத்தில் வைரலாகி வருகிறது.

C:\Users\parthiban\Desktop\earth 5.png

இறுதியாக உள்ள புகைப்படம் 2007ம் ஆண்டில் வெளியிடப்பட்டதாகும். நிலவில் இருந்து பூமியின் தோற்றம் என்ற தலைப்பில் இது வெளியிடப்பட்டது.

C:\Users\parthiban\Desktop\earth 6.png

பூமியின் தோற்றம் பற்றியும், விண்வெளி பற்றியும் ஏராளமான உண்மை மற்றும் கற்பனையான புகைப்படங்கள், வீடியோ இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. அவற்றில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து, அவற்றை ஒரு தொகுப்பாக இணைத்து, இது சந்திரயான் 2 வெளியிட்ட புகைப்படங்கள் என தவறாகச் சித்தரித்துள்ளனர். இதனை உண்மை என நம்பி பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதில் துளிகூட உண்மையில்லை.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான புகைப்படங்கள் என சந்தேகமின்றி தெளிவாகிறது.  

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படங்கள் சந்திரயான் 2 அனுப்பியவை இல்லை என, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான புகைப்படங்கள், செய்தி மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சந்திரயான் 2 முதன் முதலாக அனுப்பிய பூமியின் புகைப்படங்கள்: உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False