எச். ராஜா மாரடைப்பால் மரணம்: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் வதந்தி

அரசியல் சமூக ஊடகம்

‘’பாஜக தேசிய செயலாளர் திரு. எச்ச ராஜா மாரடைப்பால் மரணம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வதந்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\h raja 2.png

Archived Link

அரசியல் அதிரடி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் அரசியல் உள்நோக்கத்திற்காக, வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பாஜக தேசிய செயலாளராக உள்ள எச்.ராஜா தனது சர்ச்சையான கருத்துகளால் அவ்வப்போது, பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட எச்.ராஜா, எதிர்பாரா தோல்வியை சந்தித்தார். அவரது தேர்தல் வேட்பு மனு விவரங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\h raja 3.png

மக்களவைத் தேர்தல் முடிவுகள் காரணமாக, பாஜகவிற்கு எதிர் கருத்து கொண்ட நபர்கள், சமூக ஊடகங்களில் வித விதமாக, வதந்தி பரப்பி வருகின்றனர். இந்நிலையில்தான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவும் வெளியாகியுள்ளது.

உயிரோடு உள்ள நபரை அரசியல் உள்நோக்கத்திற்காக இறந்துவிட்டார் என வதந்தி பரப்புவது மிகத் தவறான விசயமாகும். தற்போதுவரை எச்.ராஜா உயிரோடுதான் உள்ளார். அவரது அன்றாட செயல்பாடுகள் தொடர்பாக, ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வரும் அளவுக்கு நலமுடன் உள்ளார்.

C:\Users\parthiban\Desktop\h raja 4.png

இரண்டு நாள் முன்புகூட, தேர்தல் தோல்வி பற்றி பாஜக ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\h raja 5.png

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், அரசியல் காரணங்களுக்காக, தவறான தகவல் பரப்பியுள்ளனர் என தெளிவாகிறது. எனவே, உயிரோடு உள்ள நபரை இறந்துவிட்டதாகக் கூறும் அந்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:எச். ராஜா மாரடைப்பால் மரணம்: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Parthiban S 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •