FactCheck: 65 நாடுகளில் Snickers தடை செய்யப்பட்டுள்ளதா?

சமூக ஊடகம் தமிழ்நாடு மருத்துவம் I Medical

65 நாடுகளில் Snickers தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார்.

இதே தகவலை பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவலில் கூறப்படுவதைப் போல, ‘Snickers சாப்பிட்டால் புற்றுநோய் வரும், அதனால், 65 நாடுகளில் அதனை தடை செய்துள்ளனர்,’ என்பதில் உண்மையில்லை.

கடந்த 2016ம் ஆண்டு, காஸாவில் விற்பனை செய்யப்பட்ட Snickersஐ வாங்கிய நபர் ஒருவர் அதில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதன்பேரில், காஸா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, Snickers விற்கப்பட்ட கடைகளில் இருந்து அவற்றை பறிமுதல் செய்து, அழித்தனர். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ செய்தியை, அரேபிய ஊடகங்கள் பலவும் வெளியிட்டிருந்தன.

Euro News Link

இதையடுத்து, தங்களது தயாரிப்புகளை காஸாவில் இருந்து திரும்பப் பெற்ற Snickers பிறகு, அவற்றை அழிக்கவும் செய்தது. அதேசமயம், குறிப்பிட்ட வீடியோவை மையமாக வைத்து, பலரும் Snickersக்கு உலக நாடுகள் தடை விதித்துள்ளதாகவும், அதனை சாப்பிட்டால் புற்றுநோய் வரும் எனவும், தகவல் பரப்ப தொடங்கினர். இதன்பேரில், மறுப்பு கூறி, அந்நிறுவனத்தின் அரேபிய பிரிவு விளக்கம் ஒன்றையும் 2018ம் ஆண்டில் வெளியிட்டிருந்தது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Snickers Arabia FB Post Link

இந்த உண்மை தெரியாமல் பலரும் இந்த பொருளை சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என இன்றளவும் வதந்தி பரப்பி வருகிறார்கள்.

இதற்கடுத்தப்படியாக, Kukure, Lays, Bingo, Cheetos, Jelly, Boomer, Kinder Joy, Cream Biscuit, 5 Star, Dairy Milk, Kit Kat, Perks, Munch, Snickers போன்றவற்றில் MSG Monosodium Glutamate கலந்துள்ளதால், அவற்றை குழந்தைகள் சாப்பிட்டால், அவர்களின் எலும்பை உருக்கி, பல் சொத்தையாகும், எனவும் தகவல் பரப்பப்படுகிறது.

உண்மை என்னவெனில், இதுதொடர்பான தரக்கட்டுப்பாடு சோதனைகளை ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செய்து, தங்களது தயாரிப்புகளின் தரத்தை நிரூபித்தபிறகே, தங்களது விற்பனையை தொடர்ந்து செய்துவருகின்றன.

DeccanHerald link

Maggie instant noodles இந்த MSG கொண்டுள்ளதாகவும், அவற்றால் பெரும் உடல்நலக் கோளாறு ஏற்படுவதாகவும் சில ஆண்டுகள் முன்பாக, பெரும் சர்ச்சை எழுந்தது. இதன்பேரில், Nestle நிறுவனம் தனது மேகி தயாரிப்புகளை திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

EconomicTimes Link

இந்த MSG ரசாயனம் பெரும்பாலும் சீன தயாரிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்றவற்றிலேயே அதிகம் சேர்க்கப்படுகிறது. அதாவது, சமையலறை சார்ந்த உணவுப் பொருட்களிலேயே இது கலக்கப்படுகிறது.

மேகி சர்ச்சையை தொடர்ந்து, ஒட்டுமொத்தமாகவே பாக்கெட் செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகள், சாக்லேட்கள் அனைத்திலும் இந்த MSG கலக்கப்படுவதாக, போகிற போக்கில் கண்மூடித்தனமாக சிலர் தகவல் பகிர்கின்றனர். குறிப்பாக, சாக்லேட்டிற்கும், இந்த MSGக்கும் பெரிதும் தொடர்பில்லை.

ajinomoto.com link I healthline.com link

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுப் பொருட்கள், நொறுக்குத் தீனிகள், சாக்லேட் போன்றவை பெரும்பாலும் குழந்தைகள் சாப்பிட ஏற்றதல்ல என்பதை ஏற்றுக் கொள்ளலாம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏனெனில், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு, இவற்றால் சரியான பங்களிப்பு செய்ய முடியாது. சாக்லேட், நொறுக்குத் தீனிகளையே முழுநேர உணவாக எடுத்துக் கொள்வதால், குழந்தைப் பருவத்தினருக்கு உடலின் வளர்ச்சி பாதிக்கப்படுவது உண்மைதான். அதற்காக அவற்றை சாப்பிடவே கூடாது என்பது ஏற்புடையதல்ல.

healthline.com link

உதாரணமாக, Snickers மூலப் பொருட்கள் பட்டியலை பார்த்தால், அதில் MSG இல்லவே இல்லை.

இதேபோல, Kit Kat மூலப் பொருட்கள் விவரத்தையும் கீழே இணைத்துள்ளோம்.

KurKure, Lays, Bingo, Kinder Joy, dairy milk, Munch என ஒவ்வொன்றுமே தரக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றி, அனுமதிக்கப்பட்ட மூலப் பொருட்களை வைத்தே தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் MSG எங்கேயும் இடம்பெறவில்லை.

இப்படி ஆதாரமே இல்லாமல், MSG கலந்த சாக்லேட்டுகள், அவற்றை 65 நாடுகள் தடை செய்துவிட்டன என்று கூறி தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:65 நாடுகளில் Snickers தடை செய்யப்பட்டுள்ளதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False