தமிழை ஒழிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சொன்னதா?

அரசியல் சமூக ஊடகம்

தமிழை ஒழித்திடு, சமஸ்கிருதம், இந்தியை புகுத்திடு என்று இந்து முன்னணி பேனர் பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Hindu Munnani 2.png
Facebook LinkArchived Link

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “ஒழித்திடு ஒழித்திடு தமிழை ஒழித்திடு… புகுத்திடு புகுத்திடு இந்தி சமஸ்கிருதம் புகுத்திடு – இந்து முன்னணி” என்று உள்ளது.

அதற்கு மேல், “தமிழர் எல்லாம் இந்துனு சொன்னவங்க இங்க வாங்கடா. இதுதான் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி உண்மை முகம். தமிழை அழிக்கத்தான் இந்த எனும் இந்து வேடம்” என்று டைப் செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவை, ஊழல் + மதவாதம் =பா.ஜ.க என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 செப்டம்பர் 20ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பல ஆண்டுகளாகவே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பேனரில் உள்ள தகவல் உண்மையானது போல இல்லை. சமஸ்கிருதம் என்று எழுதுவதற்கு பதில் “சமற்கிருதம்” என்று எழுதப்பட்டுள்ளது. பேனரைத் தாண்டி புகுத்திடு என்ற வார்த்தை செல்கிறது. இந்து முன்னணி லோகோவுக்கு மேல் எழுத்துக்கள் உள்ளன. பொதுவாக பேனர் அடிக்கும்போது லோகோ மீது எழுத்துக்கள் வராத வகையில் அடிப்பார்கள். ஆனால், லோகோ மீது வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இதனால், இது போலியாக உருவாக்கப்பட்டது போல் தெரிந்தது.

Hindu Munnani 3.png

இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 2017ம் ஆண்டு எச்.ராஜா செய்த ட்வீட்க்கு பதில் அளிக்கும் வகையில் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தது தெரிந்தது. ஆனால், இது பொய்யான புகைப்படம் என்று எப்போதே மறுத்திருந்தனர். மேலும், இந்து முன்னணி சார்பில் நடந்த போராட்டத்தின் அசல் புகைப்படம் பகிரப்பட்டு இருந்தது. அதில், “வேலூர் மாவட்டம் இந்து முன்னணி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

Archived Link

இதன் அடிப்படையில், இந்து முன்னணி போராட்டம் படத்தை எடிட் செய்து வெளியிட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது. இந்த ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

Hindu Munnani 4.png

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தமிழை ஒழிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சொன்னதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •