கேரளாவில் ஐயப்பனை இழிவுபடுத்திய எஸ்எஃப்ஐ நபர்களை போலீசார் அடித்தார்களா?

சமூக ஊடகம்

‘’கேரளாவில் ஐயப்பனை இழிவுபடுத்திய எஸ்எஃப்ஐ நபர்களை போலீசார் அடித்தார்கள்,’’ என்ற தலைப்பில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

VS. Senthil kumar என்பவர் இந்த வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார். இந்த பதிவின் மேலே, ‘’ஓம் சுவாமி சரணம் ஐயப்பா..! சுவாமி ஐயப்பனை இழிவுபடுத்தி ஓவியம் வரைந்த கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பான SFI சேர்ந்தவர்களுக்கு சிறப்பான கவனிப்பு,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவின் கீழே பகிரப்பட்ட கமெண்ட்களை ஒருமுறை படித்து பார்த்தோம். அதில் இது போலியான தகவல் என்றும், இந்த சம்பவம் உண்மையில் கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்தது என்றும் கூறப்பட்டிருந்தது.

இதில் கூறப்படுவது உண்மையோ என்ற சந்தேகம் எழுந்தது. அதில், News 9 டிவியின் லோகா இருப்பதுதான் இதற்கு காரணம். 

இதையடுத்து, இவர்கள் குறிப்பிடும் வீடியோ பற்றி உண்மை விவரத்தை தேடி, கூகுளில் ஆதாரம் தேடினோம்.

இதன்படி மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோவின் உண்மை ஆதார செய்தி கிடைத்தது. இது கர்நாடகா மாநிலம் கொடகு பகுதியில் நிகழ்ந்த சம்பவம் என்றும், சம்பந்தப்பட்ட இளைஞர்கள், இளம்பெண்களை ஈவ் டீஸிங் செய்த புகாரில் போலீசார் இவ்வாறு தாக்கியதாகவும், தெரியவருகிறது. அத்துடன் இந்த வீடியோ ஜூன் 22ம் தேதி முதல் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதாகவும் தகவல் கிடைத்தது.

My Nation News LinkArchived Link

எனவே, இது கேரளாவில் நிகழ்ந்த சம்பவமும் இல்லை. தாக்கப்படும் இளைஞர்கள் ஐயப்பனை அவமதிக்கவும் இல்லை.

முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ செய்தி பற்றிய தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கேரளாவில் ஐயப்பனை இழிவுபடுத்திய எஸ்எஃப்ஐ நபர்களை போலீசார் அடித்தார்களா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False