ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ இதுவா?

அரசியல் | Politics உலகச் செய்திகள் | World News

‘’ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ,’’ என்ற பெயரில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதில் தெரியவந்த உண்மை விவரம் அறிய தொடர்ந்து படியுங்கள். 

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Video Link 

Prakash Sugumaran
என்பவர் இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதேபோல, மேலும் சிலரும் மேற்கண்ட வீடியோவையே உண்மை என நம்பி ஷேர் செய்ததை காண முடிந்தது.

உண்மை அறிவோம்:

ஈரான் – அமெரிக்கா இடையிலான அரசியல் விரோதம் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. இதன் ஒருபகுதியாக, ஈரானின் 2வது சக்தி வாய்ந்த நபராக வலம் வந்த அந்நாட்டு ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக பொறுப்பேற்க, அவருக்கு ஈரான் உள்பட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. எந்நேரமும் இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய பரபரப்பான சூழலில்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், பகிரப்பட்டுள்ள வீடியோ உண்மையில், சுலைமானி கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்டது அல்ல. இது, வீடியோ கேம் ஒன்றின் காட்சியாகும். 2015ம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, இதுபோன்ற ஒரு போலியான வீடியோ இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் நடத்திய தாக்குதலை ஒட்டி ஏற்கனவே பகிரப்பட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பான வீடியோவை ஈரானிய தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

இது போலியான வீடியோ என்று கூறி நமது Marathi Fact Crescendo பிரிவு உண்மை கண்டறியும் சோதனை செய்து, முடிவுகளை சமர்ப்பித்துள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், வீடியோ கேமில் இருந்து எடுத்த வீடியோவை எடுத்து, சுலைமானி கொலையுடன் தொடர்புபடுத்தி வெளியிட்டுள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் வீடியோ பற்றிய தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False