FactCheck: மைல்கற்களை அருகருகே நட்டு வைத்தாரா மோடி?- பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒட்டி பரவும் வதந்தி

அரசியல் இந்தியா தமிழ்நாடு

‘’எரிபொருள் விலை உயர்வால் அதிக மைலேஜ் கிடைக்கும் வகையில், மைல்கற்களை அருகருகே நட்டு வைத்த மோடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

இந்த புகைப்படத்தில், மோடி மைல்கற்களை அருகருகே நட்டு வைப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் மேலே, ‘’பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியாது. வேனும்னா அதிக மைலேஜ் வர மாதிரி கிலோமீட்டர் கல்லை பக்கம் பக்கமா நட்டு தரோம்,’’ என்று எழுதியுள்ளனர்.

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார்.

இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link 

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தை நாம் ஆய்வு செய்தபோது, அதில் மோடி குனிந்தது போல இருக்கும் தோற்றம், எடிட் செய்யப்பட்டது என்று தெளிவாக தெரிகிறது. ஏனெனில், மைல்கற்கள் இருக்கும் பகுதியும், மோடி நிற்கும் பகுதியும் ஒட்டாமல் உள்ளன. அடுத்ததாக, மைல்கற்களில், ரத்னகிரி என்றும், தேசிய நெடுஞ்சாலை 166 என்றும் எழுதப்பட்டுள்ளது.

இதன்பேரில், நீண்ட நேரம் தகவல் தேடியபோது, குறிப்பிட்ட மைல்கற்கள் புகைப்படம் இணையதளத்தில் நீண்ட நாட்களாகவே பகிரப்பட்டு வருவதைக் கண்டோம்.

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, ரத்னகிரி அருகே ஓரிடத்தில் இறக்கி வைக்கப்பட்டு, பின்னர் எடுத்துச் செல்லப்படுவதற்காக, அருகருகே வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

உண்மையான புகைப்படம் தொடர்பான பதிவுகள் ஃபேஸ்புக், ட்விட்டரில் நிறைய உள்ளன. அவற்றை கீழே இணைத்துள்ளோம்.

Sarcastic Tweet Link I FB Post Link 1 I FB Post Link 2

இதன்படி, நகைச்சுவைக்காக பலரும் இந்த மைல்கற்கள் அருகருகே உள்ள புகைப்படத்தை ஃபேஸ்புக், ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். இதனை எடுத்து, சிலர் படிப்படியாக எடிட் செய்து, மோடியின் புகைப்படத்தையும் சேர்த்து, தகவல் பகிர்கின்றனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:மைல்கற்களை அருகருகே நட்டு வைத்தாரா மோடி?- பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒட்டி பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •