ரெட்மி ஃபோன் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறதா?- ஆன்லைன் மோசடி!

சமூக ஊடகம் வர்த்தகம்

‘’ரெட்மி ஃபோன் ரூ.10க்கு கிடைக்கிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் விளம்பரம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook claim link Archived link 

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைத்து, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். 

உண்மை அறிவோம்:
மேற்கண்ட விளம்பரம் நம்பக்கூடியதாக இல்லை. ஏனெனில், ரூ.10க்கு யாரும் ஸ்மார்ட்ஃபோன் விற்க வாய்ப்பில்லை. இருந்தாலும், சந்தேகத்தின் பேரில் Flipkart இணையதளத்தில் இப்படி ஏதேனும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா என தகவல் தேடினோம். இவர்கள் குறிப்பிட்ட அதே மாடல் ஃபோன் பற்றி தகவல் தேடியபோது, அது தற்போது ஸ்டாக் இல்லை என்றும், அதன் ஆரம்ப விலை ரூ.12,999 என்றும் தெரியவந்தது. 

Flipkart Link 

இதற்கடுத்தப்படியாக, இந்த விளம்பரத்தில் கூறப்படும் www.redmi5.tk என்ற இணையதளத்தை கிளிக் செய்து பார்த்தோம். அதன் முகப்பில் ஒரு விளம்பரம் மட்டுமே காணப்பட்டது. 

ஃபிளிப்கார்ட் பெயரிலேயே, அந்த விளம்பரத்தை தயாரித்து, வெளியிட்டிருந்தனர். விளம்பரத்தில், ‘பலர் இந்த ரூ.10 ஃபோனை வாங்கிவிட்டதாகவும், நீங்களும் வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள். குறிப்பாக, Qureka Pro ஆப் மூலமாக மட்டுமே இதனைச் செய்ய முடியும். எனவே, அந்த டவுன்லோட் செய்யுங்கள்,’ என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தனர்.

இது பார்ப்பதற்கு, வேறு ஒரு செயலி அல்லது மென்பொருளை ரெட்மி பெயரை பயன்படுத்தி மற்றவர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய முயற்சியாகவே தோன்றுகிறது. 

அத்துடன், இவர்களது விளம்பரத்தில் வாடிக்கையாளர்கள் என்ற பெயரில் பலர் கமெண்ட் பகிர்ந்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் நிஜப்பெயர் போல இல்லை.

இவர்கள் ஒவ்வொரு புரொஃபைலையும் கிளிக் செய்து பார்த்தோம். இவை எல்லாமே மார்ச், 2020 காலக்கட்டத்தில் தொடங்கப்பட்டதாக இருந்தது. 

எனவே, இது எதோ விளம்பர நோக்கத்திற்காக செய்த செயலாக உறுதியாகிறது. தவிர, இதில் உள்ள புரொஃபைல்களில் ஒன்றை கிளிக் செய்து பார்த்தபோது, அது நமது சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்தியது.

அதாவது, இந்த நபர் தொடர்ந்து இத்தகைய விளம்பரங்களை தயாரித்து, வருமானம் ஈட்டுபவர் என்று தெரியவருகிறது. இவர் தயாரித்த விளம்பரத்தில் ஒன்றுதான் மேலே உள்ள ரூ.10க்கு ரெட்மி ஃபோன் என்பதும்..

இவர்கள் கூறும் எதுவும் உண்மையில்லை. ஏனெனில், ரெட்மி ஃபோன்களை சீனாவை சேர்ந்த Xioami நிறுவனம்தான் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம், ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனைத்தளங்கள் மட்டுமின்றி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாகவும் ரெட்மி ஃபோன்களை விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்திற்கு இந்தியாவிலும் கிளைகள் உண்டு. 

Xiaomi Global Link I Xiaomi India Link 

இதுதான் இவர்களின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி. ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டால், அது இந்திய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும். அப்படி எதுவும் நடைபெறவில்லை. பிளாக் விளம்பரத்திற்காக செயற்கையாக தயாரிக்கப்பட்ட விளம்பரத்தை உண்மை என நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம், வீடியோ போன்றவற்றை கண்டால், எமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:ரெட்மி ஃபோன் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறதா?- ஆன்லைன் மோசடி!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •