சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவரின் மர்ம உறுப்பை கடித்த நாய்: ஃபேஸ்புக் வதந்தி
‘’சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவரின் மர்ம உறுப்பை நாய் கடித்தது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
அபு அமீன் என்பவர் ஏப்ரல் 13, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’அமெரிக்காவின் அர்கானஸ் மாகாணத்தைச் சேர்ந்த ரான்டால் ஜேம்ஸ் தனது அண்டை வீட்டில் வசிக்கும் நபரின் 3 மற்றும் 6 வயது மகள்களை கற்பழிக்க முயன்றார். அப்போது, அந்த வீட்டில் இருந்த நாய் ஜேம்ஸின் ஆண் உறுப்பை கடித்துக் குதறியது,’’ என எழுதியுள்ளார். இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி உண்மைதானா என கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது நிறைய பேர் இச்செய்தியை உண்மை போலவே வெளியிட்டிருந்ததை காண நேரிட்டது.
இதுபற்றி ஏசியாநெட் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதேபோல, வெப்துனியா, டைம்ஸ்தமிழ்நியூஸ் உள்ளிட்ட இணையதளங்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளனர்.
இதனை உறுதி செய்வதற்காக, ஃபேஸ்புக்கில் தேடியபோது, கடந்த 2017ம் ஆண்டு முதலே இந்த செய்தி வைரலாகி வரும் விவரம் கிடைத்தது.
ஆனால், இது உண்மை கிடையாது. உண்மையில் இந்த செய்தி 2017ம் ஆண்டு மே மாதம் வெளியானதாகும். குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் இல்லை. அவர், ஸ்காட்லாந்தில் உள்ள குயின் எலிசபெத் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருபவர் ஆவார். ஸ்கேட்போர்டிங் விளையாடிய போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், கீட்டமைன் கொடுத்து, அவரது உடைந்து போன காலை சரிசெய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்றும் தெரியவருகிறது. இதுபற்றி மிர்ரர் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுதொடர்பான முழு வீடியோவை நமது ஆதாரத்திற்காக, ஆர்கிவ் செய்துள்ளோம். அதனை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுபற்றி தொடர்ந்து வதந்திகள் பரவியதை தொடர்ந்து, www.snopes.com உண்மை கண்டறியும் ஆய்வு செய்து, அதன் முடிவுகளை சமர்ப்பித்துள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
வைரலாட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காக, யாரோ பரப்பிவிட்ட செய்தியை உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பலர் பகிர, அதனை ஏசியாநெட் தமிழ் போன்ற இணையதளங்கள் செய்தியாகவே வெளியிட்டு, மக்களை குழப்பியுள்ளது இதன்மூலமாக தெரியவருகிறது.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ஒரு பழைய செய்தியின் புகைப்படத்தை எடுத்து, தவறான முறையில் வதந்தி பரப்பியுள்ளனர் என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:சிறுமிகளை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவரின் மர்ம உறுப்பை கடித்த நாய்: ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Pankaj IyerResult: False