
‘’ஜப்பானிய மருத்துவ பேராசிரியர் தாசுகு ஹொன்ஜோ கோவிட் 19 என்பது மனிதன் உருவாக்கிய ஒன்று எனக் கூறியுள்ளார்,’’ என பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள தகவல் உண்மை கிடையாது. இந்த தகவல் பல்வேறு மொழிகளிலும் உலக அளவில் பகிரப்பட்டு வருவதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஜப்பானிய மருத்துவ பேராசிரியர் தாசுகு ஹொன்ஜோ இதுபற்றி மறுப்பு வெளியிட்டிருக்கிறார்.
இது மட்டுமின்றி குறிப்பிட்ட ஃபேஸ்புக் தகவலில், பேராசிரியர் தாசுகு, கடந்த 40 ஆண்டுகளாக, வைரஸ்கள் பற்றி ஆய்வு செய்ததாகவும், 4 ஆண்டுகள் சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் பணிபுரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், வூஹானில்தான் கொரோனா வைரஸ் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றும், அங்கே பணிபுரிந்தவர்கள் பலர் இறந்துவிட்டார்கள் என்றும் தாசுகு கூறியுள்ளாராம்.

இந்த தகவல்கள் முற்றிலும் தவறாகும். ஏனெனில், பேராசிரியர் தாசுகு பற்றி
அவர் பணிபுரியும் Kyoto University இணையதளம் சென்று அவரது விவரங்களை சேகரித்தோம். அதன் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

இதன்படி, 1942ம் ஆண்டில் பிறந்த தாசுகு ஜப்பானை கடந்து வேறு எந்த நாட்டிற்கும் சென்று பணிபுரியவில்லை. மேலும், அவர் உடல் நோய் எதிர்ப்புத் திறன், புற்றுநோய், மரபணு ரீதியான விசயங்கள் சார்ந்து செயல்பட்டு வருகிறார். இதற்கும், வைரலாஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இத்துறை சார்ந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

இது தவிர, தாசுகு பேசும் வீடியோ ஒன்றையும் ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்,
1) ஜப்பானிய மருத்துவ பேராசிரியர் நோபல் பரிசு பெற்றது வைரலாஜி பிரிவிற்காக அல்ல. புற்றுநோய் மற்றும் உடல் எதிர்ப்புச் சக்தி சார்ந்த ஆய்வுப் பணிக்காக அவர் மற்றொருவருடன் மருத்துவத்திற்கான 2018 நோபல் பரிசை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
2) வைரலாஜிக்கும், இந்த ஆய்வுப் பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
3) தன்னைப் பற்றி உலகம் முழுக்க பல மொழிகளில் பரவும் வதந்தியை தொடர்ந்து, பேராசிரியர் தாசுகு இதுபற்றி மறுப்பு தெரிவித்துள்ளார்.
4) அவர் ஜப்பானை கடந்து வேறு எங்கேயும் சென்று பணிபுரிந்தவர் இல்லை.
5) இதுபற்றி எமது இலங்கைப் பிரிவினர் ஆய்வு நடத்தி வெளியிட்ட முடிவுகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஜப்பானிய மருத்துவ பேராசிரியர் தாசுகு ஹொன்ஜோ கோவிட் 19 பற்றி எதுவும் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
