காரப்பா சில்க்ஸில் புடவை வாங்கு… கமல் பெயரில் பரவும் வதந்தி!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

சிறுமுகை காரப்பா சில்க்ஸில் புடவை வாங்கு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

KAMAL 2.png
Facebook LinkArchived Link

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ட்வீட் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாரப்பா ஊரினிலே பல கடையுண்டு யாரப்பா அங்கெல்லாம் துணி வாங்குவார்? காரப்பா சில்க்கினிலே புடவை வாங்கு ஜோரப்பா விலையும் தரமும் இங்கு” என்று கமல் ட்வீட் செய்தது போல உள்ளது. 2019 அக்டோபர் 22ம் தேதி இந்த ட்வீட் வெளியிடப்பட்டது போல தேதி, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலைத் தகவலில், “உங்கள் கடைக்கு கமல் இலவச விளம்பரம் கொடுக்க வேண்டுமா? நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் H ராஜா ஷர்மா from Bihar” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை அரசியல் நையாண்டி Political Satire என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 அக்டோபர் 22ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்து மத கடவுள்கள் பற்றி அவதூறாகப் பேசி சர்ச்சையில் சிக்கியவர் கோயமுத்தூர் சிறுமுகையைச் சேர்ந்த காரப்பன் சில்ஸ் உரிமையாளர் காரப்பன். இதைத் தொடர்ந்து இவருடைய கடையில் பொருட்களை வாங்குவதை இந்துக்கள் நிறுத்த வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் செய்திருந்தார். 

Archived Link 1
tamil.oneindia.comArchived Link 2

அதே நேரத்தில் காரப்பனுக்கு ஆதரவும் பெருகி வருகிறது. ஆயிரங்களில் நடந்துகொண்டிருந்த தொழில் இப்போது லட்சங்களைத் தாண்டி செல்கிறது என்று காரப்பன் தெரிவித்துள்ளார். காரப்பனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலும் ஆதரவு தெரிவித்தது போன்று ட்வீட் வெளியாகி உள்ளது.

vikatan.comArchived Link

எளிதில் புரியாதவகையில் பதிவிடுவது கமல்ஹாசனின் வழக்கம். அதேபோல இந்த ட்வீட் உள்ளது. மேலும், 22ம் தேதி வெளியிட்டது போல, பலரும் இதை ஷேர் செய்துள்ளது போல பார்க்க அச்சு அசல் கமல் ட்வீட் போலவே உள்ளதால் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

கமல் ட்வீட் வெளியிட்டாலே அது செய்தியாகிவிடும். அதுவும் மிகவும்  பரபரப்பாக பேசப்படும் காரப்பன் பற்றி ட்வீட் செய்திருந்தால் தலைப்பு செய்திகளை அது ஆக்கிரமிப்பு செய்திருக்கும். ஊடகங்கள் விவாதம் நடத்தியிருக்கும். ஆனால், அதுபோல எந்த ஒரு செய்தியும் வெளியானதாக தெரியவில்லை.

கமல் ட்வீட் வெளியிட்டது உண்மையா என்று கண்டறிய அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பார்த்தோம். கடைசியாக அக்டோபர் 18ம் தேதி நடிகர் பிரபு இல்லத்துக்குச் சென்றது பற்றி ட்வீட் செய்திருந்தது தெரிந்தது. அதன் பிறகு அவர் எந்த ஒரு ட்வீட்டையும் வெளியிடவில்லை.

KAMAL 3.png
Archived Link

ட்வீட் போட்டுவிட்டு எதிர்ப்பு இதுவரை எந்த ஒரு ட்வீடையும் கமல் அகற்றியது இல்லை. ஒருவேளை இந்த ட்வீட்டை போட்டுவிட்டு அகற்றிவிட்டாரா என்று கூகுளில் தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. 

Search Link

கமல் ட்வீட் போட்டாலே செய்தியாகும்போது, அதை அகற்றியிருந்தால் மிகப்பெரிய செய்தி ஆகி இருக்கும். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்காததை வைத்து பார்க்கையில் இது பொய்யானது என்று உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில், காரப்பன் சில்ஸில் புடவை வாங்கும்படி நடிகர் கமல் ட்வீட் செய்தாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் போலியானது என்று உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:காரப்பா சில்க்ஸில் புடவை வாங்கு… கமல் பெயரில் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False