தோழியின் பேண்டை கழற்றி நடுரோட்டில் விட்டுச்சென்ற கத்ரினா கைஃப்?– ஏஷியாநெட் செய்தி உண்மையா?

சமூக ஊடகம் சினிமா

ஏஷியாநெட் தமிழில், தோழியின் பேண்டை கழற்றிவிட்டு நடுரோட்டில் உள்ளாடையுடன் விட்டுச்சென்ற கத்ரினா கைஃப் – வைரல் வீடியோ என்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர். இது என்ன விவகாரமான செய்தியாக இருக்கிறதே என்று ஆய்வை மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

தோழியின் பேண்ட்டை கழட்டி நடு ரோட்டில் உள்ளாடையோடு விட்டு சென்ற பிரபல நடிகை! வைரல் வீடியோ

Archived link 1

Archived link 2

ஏஷியாநெட் தமிழில், 2019 மே 31ம் தேதி தோழியின் பேண்டை கழட்டி நடு ரோட்டில் உள்ளாடையோடு விட்டுச் சென்ற பிரபல நடிகை! வைரல் வீடியோ என்று கூறப்பட்டுள்ளது. இதை படிக்கும்போது, திரைப்பட ஷூட்டிங்கில் அல்லது நிஜமாகவே இப்படி கத்ரீனா கைஃப் செய்தது போலவும், அதனை யாரோ வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டது போன்றும் இந்த தலைப்பு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது. இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஏஷியாநெட் தமிழில் வெளியான செய்தியின் ஃபேஸ்புக் லிங்கை கிளிக் செய்தால், வேறு ஒரு செய்தி ஓப்பன் ஆனது. மீண்டும் மீண்டும் கிளிக் செய்தபோது, வேறு செய்தியின் URL லிங்கில், கத்ரினா கைஃப் செய்தி ஓப்பன் ஆனது. பின்னர், இன்னொரு முறை முயற்சித்தபோது, கத்ரினா கைஃப் செய்தியின் URL லிங்க் வேறாக இருந்தது. அது டெக்னிக்கல் பிரச்னை என்பதால் அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

Katrina Kaif 2.png

செய்திக்கு வந்தோம்… பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரினா கைஃப். இவர், தன்னுடைய தோழியின் பேண்டைகழற்றச் சொல்லி வாங்கி, அவரை உள்ளாடையோடு நடுரோட்டில் விட்டுச் சென்றார் என்று ஏஷியாநெட் தமிழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும், வீடியோ வைரல் ஆகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த செய்தியைப் படிக்கையில், கத்ரினா கைஃப் அவரது தோழிக்கு இடையே நடந்த நிகழ்வு வீடியோவாக வைரல் ஆகி வருகிறது, அது தொடர்பான செய்தியை ஏஷியாநெட் வெளியிட்டுள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

செய்தியை படித்துப் பார்த்தோம்…

அதில், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள கத்ரினா கைஃப் நிகழ்ச்சி தொடர்பான இன்ஸ்டாகிராம் வீடியோவை ஆதாரமாக வைத்து செய்தி எழுதியிருந்தது தெரிந்தது.

அந்த வீடியோ வெறும் முன்னோட்டம்தான். நிகழ்ச்சியின் சுவாரசிய நிகழ்வுகளை துண்டு துண்டாக வெட்டி வெளியிட்டுள்ளனர். முழுவதும் தெரிந்துகொள்ள நிகழ்ச்சியைப் பாருங்கள் என்று விளம்பரம் செய்துள்ளனர்.

அந்த வீடியோவில், கத்ரினா கைஃப் பற்றி அவரது தோழி ஒருவர் பேசுகிறார். அப்போது அவர், “கத்ரினா வீட்டில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம்… உன்னுடைய பேண்ட் நன்றாக இருக்கிறது என்று கத்ரினா கூறினார். நான் அதைக் கழற்றிக்கொடுத்தேன். நான் வெறும் உள்ளாடையுடன் உட்கார்ந்திருந்தேன். அவர் அதை எடுத்து அணிந்துகொண்டு வெளியே கிளம்பி போனார்…” என்று கூறுகிறார். இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

பின்னர் கத்ரினா கைஃப் பேசுகையில், “நான் எங்கு வேண்டுமானாலும் ஷாப்பிங் செய்பவள்… உங்களைப் பார்க்கிறபோதே நான் ஷாப்பிங் செய்துவிடுகிறேன். நான் மற்றவர்களிடம் வாங்குவதே, வைத்துக்கொள்ளத்தான்” என்கிறார். இதன் முழு விவரத்தைத் தெரிந்துகொள்ள சனிக்கிழமை இரவு 9 மணிக்கு கலர்ஸ் இன்ஃபினிட்டி பாருங்கள் என்கிறது அந்த விளம்பரம். இந்த முன்னோட்ட வீடியோவை 2019 மே 29ம் தேதி வெளியிட்டுள்ளனர்.

Katrina Kaif 3.png

இந்த வீடியோவில் ஏஷியாநெட் தமிழில் கூறியுள்ளது போல, “நடு ரோட்டில் பேண்டை கழற்றிக்கொடுத்தேன்” என்று கத்ரினாவின் தோழி கூறவில்லை.” நான் உள்ளாடையுடன் வீட்டில் அமர்ந்திருக்க, அந்த பேண்டை எடுத்துக்கொண்டு வெளியேறினார் கத்ரினா” என்றுதான் கூறியிருக்கிறார்.

Katrina Kaif 4.png

இதன்படி, வீடியோவை அரைகுறையாக பார்த்துவிட்டு, அதன் பேரில் பரபரப்புக்காக எழுதப்பட்ட செய்தி இது என்று தெரியவருகிறது. அத்துடன், மேற்கண்ட ஏஷியாநெட் செய்தியில் ஏகப்பட்ட ஒற்று, மரபு, வாக்கிய பிழைகள் உள்ளன. இதை பார்க்கும்போது, செய்தியை சரிபார்க்காமல் ஏனோ தானோ என்று பப்ளிஷ் செய்துள்ளதாக, தெளிவாகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், “தோழியின் பேண்டை கழற்றிவிட்டு, நடுரோட்டில் விட்டுச் சென்ற நடிகை, வைரல் வீடியோ,’’ என்ற ஏசியாநெட் செய்தியின் தலைப்பு முதல் அதில் கூறப்பட்டுள்ள விசயங்கள் அனைத்தும் தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தோழியின் பேண்டை கழற்றி நடுரோட்டில் விட்டுச்சென்ற கத்ரினா கைஃப்?– ஏஷியாநெட் செய்தி உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •