தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள்: உண்மை அறிவோம்!

சமூக ஊடகம்

‘’தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஒருமுறை விரிவாகப் படித்துப் பார்த்தோம். அதன் தலைப்பில், தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள் எனக் கூறிவிட்டு, செய்தியின் உள்ளே ஜோதி வெங்கடாசலத்துக்குப் பின் தமிழகத்தில் பதவியேற்ற 2வது பெண் அமைச்சர் எனக் கூறியுள்ளார். இதன்படி பார்த்தால், குழப்பமே மிஞ்சுகிறது. பதிவை வெளியிட்டவர் தனது ஆதாரத்திற்காக, சில செய்தி இணையதளங்களின் கட்டுரையையும் இணைத்துள்ளார். அதில், விகடன் செய்தி லிங்கும் ஒன்றும். அதிலும், தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள் என தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, யார்தான் தமிழகத்தில் முதலில் அமைச்சர் பதவி வகித்த பெண் என விவரம் தேடினோம். அப்போது, 1953 முதல் 1954 வரை ஜோதி வெங்கடாசலம் என்பவர் ராஜாஜி அமைச்சரவையில் மது விலக்கு மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக பதவி வகித்த விவரம் கிடைத்தது.

இதேபோல, இவர்கள் குறிப்பிடும் லூர்தம்மாள் பற்றி விவரம் தேடினோம். அவர், 1957ம் ஆண்டில் குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வென்ற லூர்தம்மாள், காமராஜ் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். அதாவது, 1957 முதல் 1962ம் ஆண்டு வரை, அவர் அமைச்சராக இருந்து, மீன்வளத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தியிருக்கிறார். எனினும், இவர்கள் கூறுவது போல, இவர் தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் கிடையாது.  

லூர்தம்மாள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் அமைச்சர்; கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முதல் பெண் ஆமைச்சர், என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் இவர் கிடையாது. இதுபற்றி தி இந்து தமிழ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் முன்னுக்குப் பின் முரணான தகவல் உள்ளதாக, தெரியவருகிறது. பதிவின் தலைப்பில் தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் எனக் கூறிவிட்டு, அதன் உள்ளே 2வது பெண் அமைச்சர் என, சம்பந்தப்பட்ட பதிவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இதில், நம்பகத்தன்மை இல்லை என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள்: உண்மை அறிவோம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •