பெண்ணுடன் நடனமாடிய மகாத்மா காந்தி புகைப்படம்… உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

மகாத்மா காந்தி, பெண் ஒருவருடன் நடனம் ஆடுவது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link

காந்தியடிகள் போல உள்ள ஒருவர் வெளிநாட்டு பெண்மணி ஒருவருடன் நடனமாடுகிறார். அதன் கீழ், “MAHATMA STEPS OUT of character as Gandhi” என்ற வார்த்தைகள் உள்ளன. எங்கோ, புத்தகத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுத்திருப்பது தெரிந்தது. ஆனால், புகைப்படம் பற்றிய குறிப்பு நீக்கப்பட்டிருந்தது.

இந்த புகைப்படத்தை, Chowkidar Navadurga Kanagaraj என்பவர் 2019 மே 16ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “தேச பிதா? நம்மை அடிமைப்படுத்தி கொடுமை செய்த கூட்டத்தில் வெள்ளைக்கார கிறஸ்தவச்சியுடன் பிரேக் டான்ஸ் ஆடிய போது” என்று குறிப்பிட்டுள்ளார். பார்க்க காந்தியடிகள் போலவே இருப்பதால், பலரும் இதை பகிர்ந்து வருவதுடன், மிகவும் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காந்தியடிகள், நேரு உள்ளிட்ட சுதந்திரத்துக்கு போராடிய காங்கிரஸ் தலைவர்களைப் பற்றித் தொடர்ந்து அவதூறான செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில், காந்தியடிகள் பெண்ணுடன் நடனமாடுவது போலவும், பெண் ஒருவருடன் மூக்கோடு மூக்கு ஒட்டி மிக நெருக்கமாக இருப்பது போன்று பல பதிவுகள் அவ்வப்போது பரவி வருகின்றன.

DANCING GANDHI 2.png

காந்தி நடனமாடும் படத்தின் கீழ், அந்த படம் பற்றிய குறிப்பு இருந்ததற்கான ஆதாரம் இருந்தது. ஒரே ஒரு வரி மட்டும் பார்க்க முடிந்தது. அதில், “MAHATMA STEPS OUT of character as Gandhi” என்று இருந்தது. அதன் மற்ற வரிகள் அழிக்கப்பட்டு இருந்தன. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம்.

DANCING GANDHI 3.png

தேடல் முடிவில், இந்த படம் போலி என்பதற்கு நிறைய செய்திகள் கிடைத்தன. ஆனால், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற படத்தின் அசல் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், அசல் புகைப்பட பதிவில் இடம் பெற்ற புகைப்படக் குறிப்பின் படம் ஒன்று நமக்கு கிடைத்தது. அதை பெரிதாக்கி பதிவிட்டிருந்தனர்.

DANCING GANDHI 4.png

அதில், படத்தில் இருப்பது உண்மையான காந்தி இல்லை. சிட்னியில் நடந்த படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பதிவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

DANCING GANDHI 5.png

மேலும், இது தொடர்பாக 2012ம் ஆண்டு பாலிவுட் லைஃப் என்ற சினிமா செய்தி இணைய பக்கத்தில் இது தொடர்பான செய்தி நமக்கு கிடைத்தது. அதில், சிட்னியில் நடந்த சாரிட்டி நிகழ்ச்சியில் காந்தி வேடத்தில் ஒருவர் நடனமாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், காந்தி நடனமாடும் படத்தை உற்று நோக்கினால், நடிகரின் கை புஜம் வலிமையாக இருப்பதை காணலாம். உண்மையில் காந்தியடிகள் உடல் மெலிந்து காணப்படுவார். வரலாற்றை மாற்றி சித்தரிக்கும் மிகப்பெரிய ஆபத்தில் நாம் இருக்கிறோம் என்பதற்கு இந்த புகைப்படம் எடுத்துக்காட்டு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய #FactCrescendo கூட கடந்த 2018ம் ஆண்டு ஆங்கிலத்தில் இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தி முடிவுகளை வெளியிட்டிருந்தது. அதில், காந்தியடிகளின் புஜம் மற்றும் காலணிகள், நடனமாடுபவரின் புஜம் மற்றும் காலணியோடு ஒத்துப்போகவில்லை என்று ஒப்பீடு செய்து, நடனமாடும் காந்தியடிகள் படம் போலியானது என்று உறுதி செய்திருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட ஆய்வில், பெண்ணுடன் நடனமாடுபவர் உண்மையான காந்தியடிகள் இல்லை. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த நன்கொடை திரட்டும் நிகழ்ச்சியின்போது ராய் மெம் என்ற நடிகர் காந்தியடிகள் போல உடை அணிந்து நடனமாடியது உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு வெளியான செய்தியும் ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் வெளியான செய்தியும் ஆதாரமாக அளிக்கப்பட்டுள்ளது.

உண்மை தெரியாமல் இருக்க, புகைப்படத்தின் குறிப்பு அகற்றப்பட்டுள்ளது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது, விஷயமத்தனமானது என்று நிரூபிக்கப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பெண்ணுடன் நடனமாடிய மகாத்மா காந்தி புகைப்படம்… உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False