மோடி பெயரை கெடுக்க திமுக மற்றும் காங்கிரஸ் நிர்பந்தம் கொடுத்தனர் என்று அய்யாக்கண்ணு கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்படி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நிர்பந்தம் கொடுத்தனர்,’’ என்று அய்யாக்கண்ணு தெரிவித்ததாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படும் செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 மற்றும் +919049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர்.

இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் பலர் உண்மை போல பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:

தலைநகர் டெல்லியில் கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர் அய்யாக்கண்ணு. தென்னந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவரான இவர் மீது டெல்லியில் நடத்திய போராட்டத்திற்காக, ஏராளமான அரசியல் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அந்த வரிசையில், திமுக, காங்கிரஸ் கட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, இந்த போராட்டத்தை நடத்தியதாக, அய்யாக்கண்ணு தெரிவித்தார் என்று, முன்பு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது. ஆனால், இது உண்மையான தகவல் அல்ல என்று அப்போதே நாம் ஃபேக்ட்செக் வெளியிட்டிருந்தோம்.

Fact Crescendo Tamil Article Link

இதேபோல, மீண்டும் ஒரு புதிய வதந்தியை அய்யாக்கண்ணு பெயரில் உருவாக்கி தற்போது பகிர்ந்து வருகிறார்கள். உண்மையில், ‘’மோடியின் நற்பெயரை கெடுக்க திமுக, காங்கிரஸ் நிர்பந்தம் கொடுத்தனர்,’’ என்று அய்யாக்கண்ணு, எங்கேயும் கூறவில்லை. இதுபற்றி நாம் மீண்டும் ஒருமுறை அவரது தரப்பில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

மேலும், இப்படி ஊடகங்களில் எங்கும் செய்தி வெளியாகியுள்ளதா என்று பார்த்தால், எந்த பதிவும் காண கிடைக்கவில்லை. அவர் இவ்வாறு பேசியிருந்தால், அது கண்டிப்பாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும். எனவே, இது வதந்தி என்று சந்தேகமன்றி உறுதி செய்யப்படுகிகறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:மோடி பெயரை கெடுக்க திமுக மற்றும் காங்கிரஸ் நிர்பந்தம் கொடுத்தனர் என்று அய்யாக்கண்ணு கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False